நாம எழுதிறத யார் பார்க்க போறா ?
இந்த பதிவை யார் படிக்க போறா ?
அதனால நமக்கு என்ன லாபம் .
இப்படி நினைத்து சுமார் 6 மாசம் ஒன்னும் எழுதல. (அதுக்கு முன்னாடியும் ஒன்னும் கிழிக்கல .)
ஒரு வருஷம் இந்த தமிழ் வலை உலகை ஒரு பார்வையாளனாக பார்த்து கொண்டு இருந்தேன் . ஆனால் நீங்கள் நினைப்பதை போல இந்த தமிழ் வலை உலகம் ஒன்றும் உத்தமம் அல்ல . பல வலை உலக பிரம்மாக்கள் செய்யும் ,செய்த உள் குத்துகளை சில சூழ்ச்சிகளை நீங்களும் பயன் படுத்தி நீங்களும் வலை உலக பிரம்மாவாக மாறுங்கள் .
அதில் சில இதோ .
* திடீரென உங்கள் இணைய தளத்தை யாரோ hack செய்து விட்டதாக ஒரு புரளியை கிளப்பி ,அதை யாராவது ஒரு பெரிய வலை புள்ளியின் பெயரை சொல்லி அவரின் புகழை உங்களுக்கு சாதகமாக செய்து கொள்ளுங்கள் ..(இப்போ உங்களுக்கு இட்லி வடை ஞயாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல ).
* ரஜினி, ஞாநி ,வால்பையன் ,தமிழச்சி போன்ற வலை பிரபலங்களை மானா வாரியாக நீங்கள் திட்டுங்கள் . பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பாக உங்களுக்கு பல பின்னூடங்கள் நிச்சயம் .(நீ என்ன விருந்தாளிக்கு பொறந்தவன ? போன்ற கேள்விகளை தாங்க நீங்க ரெடி என்றால் இது உங்களுக்கு ஓகே )
*ரொம்ப கேவலமா தலைப்பு கொடுத்து பாருங்களேன் ..உதரணத்திற்கு 16 வயது பெண்ணை 18 தடவை கற்பழித்த 95 வயது வாலிபர் ... சொன்ன நம்ப மாட்டிங்க , கண்டிப்பா பல repeat பார்வையாளர்கள் உங்களுக்கு உண்டு .
*கதை எழுவது ரொம்ப ஈசி . பொண்ணு ,பார்த்தால் ,இளித்தல்,முக்கள் ,முனகல் , அப்புறம் தடவல் ..கொஞ்சம் கருத்து . இது தான் அனைத்து காதல் கதைகளின் சாராம்சம் (நான் எழுதிய கதை உட்பட )
* உங்கள் page counter-ஐ போலியானதாக வைக்கலாம் .. ஒரு நாளில் 1000,2000 என பொய் சொல்ல இது உதவும் ... இது எப்படி சாத்தியம் என்று சின்ன புள்ள தனமா கேட்காதிங்க .Browser Simulator அப்படின்னு சில கணினி மென் பொருட்கள் உண்டு . அதை பயன் படுத்தி உங்கள் page counter-ஐ நீங்கள் 1000,2000,10000 என உயர்த்தி ,நீங்கள் வலை உலக ராஜா என தம்பட்டம் அடித்து கொள்ளலாம் (இப்படி யா ஏமாத்தி கிட்டு இருகாங்க , பாவி பயல்க )
*உங்களுக்கு ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் உடனே அவரை பற்றி ஓஹோ வென பாராட்டி ஒரு பதிவு போடுங்கள் ..என்னடா பிடிக்காதவனை பத்தி எதற்கு பதிவு என்று நீங்கள் கேட்டால் ,நீங்கள் இன்னும் அரசியலில் நிறைய கத்துக்கணும் .. முதல்ல பாராட்டி ஒரு பதிவு ..பின் அனானியாக நீங்களே வந்து சும்மா கிழி கிழின்னு கிழிச்சுருங்க .. இப்ப தெரியுதா ஏன் பல பாராட்டு பதிவுகள் வருது என்று ? (அட கொய்யால ....அரசியலில் ரொம்ப தூரம் போவனுமோ )
எப்படி சமர்த்தியம்மாக பின்னூட்டம் இடுவது ...திட்டுவது .... இதை பற்றிய மர்மங்கள் வரும் பதிவில் வலை உலக பிரம்மாக்களின் முகத்திரையை கிழிக்க நீங்களும் பின்னூட்டம் இட்டு சொல்லலாம் tamilsh ல உங்க முத்திரையை குத்திட்டு போங்க
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
▼
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
1/08/2009
வகை: அனுபவம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
18 பதில் செப்பியவர்கள்:
UNGADAIRRUNDHUTHAN START PONNANUM அட கொய்யால
ஞாநி ,தமிழச்சி ponravarkalai aappu adippom
//*கதை எழுவது ரொம்ப ஈசி . பொண்ணு ,பார்த்தால் ,இளித்தல்,முக்கள் ,முனகல் , அப்புறம் தடவல் ..கொஞ்சம் கருத்து . இது தான் அனைத்து காதல் கதைகளின் சாராம்சம்
(நான் எழுதிய கதை உட்பட )//
கருத்து கந்தசாமின்னே நீங்க.....சரவெடி....
//ரஜினி, ஞாநி ,வால்பையன் ,தமிழச்சி போன்ற வலை பிரபலங்களை//
நான் பிரபலமா!
இதுக்கு பிஞ்ச செருப்பாலையே அடிச்சிருக்கலாம்
ஏன் இந்த கொலைவெறி!
// ரஜினி, ஞாநி ,வால்பையன் ,தமிழச்சி போன்ற வலை பிரபலங்களை மான வாரியாக நீங்கள் திட்டுங்கள் . //
அடடடே இது நல்லாருக்கே.
வால் நீங்க எங்கையோ போயிட்டீங்க.
//
வால்பையன் said...
இதுக்கு பிஞ்ச செருப்பாலையே அடிச்சிருக்கலாம்
//
மன்னிக்கவும் ..நான் ஒரு அகிம்சாவதி ...
(என்னிடம் பிஞ்ச செருப்பு இல்லை )
வால்பையன் --இவரை பற்றி யாராவது ஒரு கிசு கிசு please ..
//வால்பையன் --இவரை பற்றி யாராவது ஒரு கிசு கிசு please .//
நானே சொல்றேனே!
வால்பையனும்,ஹாலிவுட் நடிகை ஹாலிபெர்ரியும் அடிக்கடி சந்தித்து பேசுகிறார்களாம்.
(கனவில்)
பாரிஸ்க்கு விமான டிக்கேட் என்ன விலைன்னு விசாரிச்சுகிட்டு இருக்காரு.ஃஃஃஃ
ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க கார்த்திக்?
// திடீரென உங்கள் இணைய தளத்தை யாரோ hack செய்து விட்டதாக ஒரு புரளியை கிளப்பி ,அதை யாராவது ஒரு பெரிய வலை புள்ளியின் பெயரை சொல்லி அவரின் புகழை உங்களுக்கு சாதகமாக செய்து கொள்ளுங்கள் //
மக்களே நீங்க படிக்கிறது என் இடுகை!! இந்த மந்திரன் ஏன் தளத்தை hack பண்ணி என் இடுகையை எடுத்து அவுரு இடுகையா போட்டுடாரு!!
வால் பையன் என்ற புயல் பாண்டிச்சேரியில் மையம் கொண்டு இப்போது பாரிஸில் கரையை கடக்க போவுது .....அம்மாடியோ
//மக்களே நீங்க படிக்கிறது என் இடுகை!! இந்த மந்திரன் ஏன் தளத்தை hack பண்ணி என் இடுகையை எடுத்து அவுரு இடுகையா போட்டுடாரு!!//
அப்படி போடு அருவாளை
// ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க கார்த்திக்?//
தவறுதான்.
அன்பு நண்பரே!!!
பதிவு அருமை!!!
பொங்கல் வாழ்த்துக்கள்!!
தேவா...
நன்றி தேவா...
உங்களுக்கும் என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள
பதிவு நல்லாருக்குங்கோ.
நன்றி குடுகுடுப்பை ..
ஆமாம் , உங்க பெயர் ரொம்ப வித்தியாசமா இருக்கு
கருத்துரையிடுக