நமது நாட்டில் உள்ள எல்லை சாமிகள் யார் யாருன்னு தெரியுமா?
நமது உள் துறை அமைச்சர் ,நமக்காக ஒரு புதிய உளவு துறையை உருவாக்க போறாராம் . நாம் இனி நிம்மதியாக இருக்கலாம் .
இனி ஒரு தீவிரவாதி கூட நம் நாட்டில் நுளைய போவது இல்லை . குண்டு இல்லை .
மனித பலிகள் தேவை இல்லை .
தாலிகள் இனி தூக்கு மேடை ஏற போவது இல்லை .
அம்மா சாமிக்கிட்ட போய்கிட்டாங்க அப்படின்னு ஒரு பிஞ்சுக்கிட்ட பொய் சொல்ல தேவை இல்லை .
நாளைய மன்னர்கள், இன்று கைகளை இழக்க தேவை இல்லை .
இவை எல்லாம் நடக்க போவதுன்னு நினைக்கிறதற்க்கு முன்னாடி, நம்மிடம் உள்ள இந்த படைகளை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகுங்க .
1.உளவுத் துறை.
2.அமைச்சரவை செயலாக்கத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா )
3.வருவாய்த்துறை உளவு இயக்கம்.
4.மத்திய பொருளாதார உளவுத் துறை.
5.அமலாக்க இயக்கம்
6.போதைப்பொருள் கட்டுபாட்டுத் துறை.
7.சிறப்பு எல்லைப் படை.
8.எல்லை பாதுக்கப்பு படை.
9.மத்திய இடர் காப்பு படை.
10.இந்திய திபத் எல்லைக் காப்பு படை.
11.மத்திய தொழிற்ச்சாலை பாதுகாப்பு படை.
12.தேசிய பாதுகாப்பு படை.
13.அசாம் சுழற் துப்பாக்கி படை.
14.சிறப்பு பிரிவு-அந்தமான் மற்றும் நிகோபார் பாதுகாப்பு படை.
15.குற்றப் பிரிவு குபி,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி
16.சிறப்பு பிரிவு - லட்சத் தீவு காவற் படை.
தமிழ்நாடு அளவில்
1.குற்றப்பிரிவு சி.ஐ.டி
2.சிறப்பு புலனாய்வு குழு
3.போதைப் பொருள் தடுப்பு பிரிவு
4.கொள்ளை கூட்டத் தடுப்புப் பிரிவு
5.சிலைத் திருட்டுப் பிரிவு
6.சிவில் சப்பளை சி.ஐ.டி
7.சிறப்பு அதிரடி படை
8.கமாண்டோ படை
9.மாவட்ட குற்றப்பிரிவு
இன்னும் ,இன்னும் நெறையா.... இனி மேல் உருவாக போகிற அந்த ஒரு அமைப்பு தான் ,நம்மை காப்பத்த போவுதுன்ன ..
இவங்களை என்ன பண்ண போறங்க .?
இன்னொரு குண்டு வெடிப்பு ... இன்னொரு புதிய அமைப்பு .. விளம்பிரங்களுக்கு இடையே துக்கம் விசாரிக்க போகின்றன நம் தொலைக்காட்சிகள். எங்களை எந்த சாமியும் காப்பத்தல.. எங்களுக்கு எந்த சாமியும் தேவை இல்லை. குறைந்த பட்சம் சாத்தானாவது வந்து நம் கவலை தீர்த்து வைக்காதா?
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
▼
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
1/12/2009
வகை: அனுபவம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 பதில் செப்பியவர்கள்:
//விளம்பிரங்களுக்கு இடையே துக்கம் விசாரிக்க போகின்றன நம் தொலைக்காட்சிகள்.
இதில் நாங்கள் தான் முதலில் செய்தியை கொண்டுவந்தோம் என்று விளம்பரம் வேறு!!
//குறைந்த பட்சம் சாத்தானாவது வந்து நம் கவலை தீர்த்து வைக்காதா?
இது அதிக பட்ச ஆசை!!
//இதில் நாங்கள் தான் முதலில் செய்தியை கொண்டுவந்தோம் என்று விளம்பரம் வேறு!!//
ஆமாம். தீவிரவாதி உள்ளே நுழைந்துவிட்டான்.Watch after this Break என்று போடுவார்கள்.
//
இது அதிக பட்ச ஆசை!!
//
அது சரி. என்ன செய்ய ?
கண்ணுக்கு தெரியாத சாமியை விட கண்ணுக்கு தெரியுர பேய் எவ்வளவோ மேல
அண்ணே, விருது கொடுத்து ரொம்ப நாள் ஆகுது!! வந்து வாங்கிட்டு போங்க!!
கருத்துரையிடுக