மந்திர ஆசைகள்

1/22/2009

தியாகராஜர் மஹா உற்ச்சவம் - அப்படின்னா? புரியும் ஆனா புரியாது.

ஒரு நண்பனின் அன்புத் தொல்லையின் காரணமாக நானும் சென்றேன் தியாகராஜர் மஹா உற்ச்சவத்திற்க்கு .
 உள்ளே போனதும் தோன்றியது என்னெவென்றால் "புரியும் ஆனா புரியாது".
 வழி நெடுக ஒரே வங்கிகளின் அணிவகுப்பு ..
 விள்ம்பரங்கள்.. சாமியோவ்! இவ்வளோ பணம் இருக்கா ?
 ஆனா படிச்ச மாக்காங்களுக்கு ஏன் கடன் கிடைக்கல? அப்படின்னு கேட்டா , பதிலாக கிடைப்பது " இருக்கு ஆனா இல்லை".
போண்டா கடைகளில் கூட்டம் கண்னை கட்டுது.ஆனா புத்தக கடைகளில் என்னை தவிர எந்த நாயும் இல்லை.
அந்த புத்தக கடையில்,கிடார் கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு புத்தகம் ..படிச்சு எப்படி கற்றுக் கொள்வது அப்படின்னு இந்த சின்ன மூளையில் தோன்றியதால்,கேட்டேன் ஒரு கேள்வி . "இந்த புக்குக்கு ,கிடார் இலவசமா கொடுப்பீங்களா?". பதிலாக கிடைத்தது ஒரு வெறித்தனமான பார்வை .
 வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் எடுத்தேன் ஓட்டத்தை. அப்புறம் தியாகராஜரின் சாமாதிக்கு சென்றேன். பிணத்தினை கோவில் வழியாக கொண்டு சென்றால் ஆகம விதிகளை துணைக்கு அழைப்பவர்கள் அங்கே மனமுருகி பாடி கொண்டு இருந்தார்கள்."புரியுது ஆனா புரியல" ????!!!!.
 பாடல்களை, மன்னிக்கவும் கீர்த்தனைகளை எழுதியிருந்தார்கள் கொங்கு தெலுங்கை கன்னித் தமிழில் .பிரன்ச்சு தாடி வைத்து பக்கா Formal ஆடையில் நான் அங்கு சென்று இருந்தேன். என்னை பல கொலைகளில் இருந்து அதுதான் காப்பாற்றியது.
ஆச்சாரமாக நின்று கொண்டு இருந்த் ஒரு அவாளிடம் இந்த் கீர்த்தனைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டது ஒரு குத்தமா? மீண்டும் ஒரு கொலை வெரி பார்வை.
அவருடன் கொஞ்சம் பேசலாம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே, பாடகி மஹதி உள்ளே பிரவேசித்தார். என்னா அழகு?. ஒப்பனை கலைஞனின் கை வண்ணம் தான் அதற்க்கு காரணம் என்று சொன்னால் நீங்கள் கல்லாலே அடிப்பீர்கள் என்று தெரியும்.
அப்ப பார்த்து," அண்ணே இவங்க எந்த படத்துல கதாநாயகி" என்று ஜொல்லு வடிய ஒரு பொடியன் கேட்டானே பார்க்கணும் . ஏண்டா இவ்வளோ கூட்டம் என்று இந்த குழந்தைக்கு அப்பத்தான் புரிந்தது . ஆனால் மமதியின் கணவர் யாராக இருக்க கூடும் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே பஜ்ஜியும் கையுமாக நான் ஒருத்தரை சந்தித்தேன்.

 அவர் என் நண்பனுடைய நண்பனின் அண்ணனாம். என் நண்பனின் நண்பனுக்கு மஹதி அண்னி யென்றால் அந்த பஜ்ஜிவாலா யார் என்று நான் சொல்லத் தேவை இல்லை.(நல்லா குழப்புறேனா?)
என் நண்பனும் , மஹதியின் கணவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கே மஹதி இல்லை, நானும் இல்லை.

 இல்லப்பா அவங்க உள்ளே பாடிக் கொண்டு இருந்தார்கள். என்னடா இவன், பாட்டை அதான்பா கர்நாடக சங்கீதத்தை பத்தி சொல்லவே இல்லைன்னு ? சொல்றேன்,சொல்றேன். நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு.என்னா அவசரம்?

 அங்கே இருந்த கூட்டத்தில் ஒரு கால் வாசி பேர், ஒரு பாட்டையும் கவனியாமல் நல்லா கடலை(ஆண் vs பெண்),பட்டறை(ஆண் vs ஆண்) , பொங்கல் (பெண் vs பெண்) போட்டு கிட்டு இருந்தார்கள்.ஒன்னும் புரியாமல் நான் நின்று கொண்டு இருந்த போது, பல பேர் ஒரு வகையா தலையை , கையை ஆட்டி கொண்டு இருந்தார்கள். சரி விடுங்க.நாமலும் அதே மாதிரி கை, தலையை ஆட்டி கொண்டு இருந்தென்.

 பக்கத்தில் இருந்த ஒரு பெருசு,கிட்ட வந்து ,புது பையன் நல்லதான் பாடுறான். ஆனா பின்னாடி அவுங்க சரியா வாசிக்கல இல்ல. ஸ்வரம் சரியா இல்லை.4 கட்டை பதிலா ,5 கட்டை போட்டு கிட்டு இருகாங்க. .எப்போ திருந்த போறோங்களோ என்றார்.

7G ரெயின்போ காலனி கதாநாயகன் மாதிரி நான் சிரித்த சிரிப்பை வைத்தே நம்மளை சரியாக கனித்த அந்த பெருசை நான் பாரட்டுகிறேன். ஓத்துக்குறேன் பெருசு பெருசுதான்.

ஒலி பெருக்கிகள் ஒவெர் டைம் வேலை பார்த்ததால் என்னொவோ இனிக்க வேண்டிய இசை, செவியை கிழித்துக் கொண்டு இருந்தது .நானும் எவ்வளவு நேரமா சங்கீதம் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?. முடியல. சத்தியமா முடியல. அங்கே இருந்து உடனே வெளிநடப்பு செய்தேன்.

 அங்கே என்ன கொங்கு தெலுங்கு மக்களா இருக்காங்க ? நம்ம தமிழ் மக்கள் தானே. பின்ன ஏன் ஒரு வார்த்தை கூட தமிழில் இல்லை. கேட்டா, கழுதைக்கு தெரியுமா சங்கீத வாசனை அப்படின்னு கேட்பாங்க ? . என்ன சொன்னாலும் , எப்படி பாடினாலும் ,புரியவில்லைன்னாலும் , அடுத்த தியாகராஜர் மஹா உற்ச்சவத்திற்க்கு இப்பவே ரெடியாய் இருக்காங்க.

 அடி வயிறு வரை இனித்தது ஆண்டவர் கடை அசோகா அல்வாவும், டீ கடையில் பாடிய நாக்க முக்க பாடலும். பொது மக்களை சென்று அடையாத எந்த கலையும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. எப்போ புரிய போதோ அவங்களுக்கு ?


7 பதில் செப்பியவர்கள்:

யாத்ரீகன் சொன்னது…

:-)

பெயரில்லா சொன்னது…

//ஆனா புத்தக கடைகளில் என்னை தவிர எந்த நாயும் இல்லை//

நீங்க அங்க புக் ஸ்டால் போட்டு இருந்தீங்களா ??

பெயரில்லா சொன்னது…

//அங்கே இருந்த கூட்டத்தில் ஒரு கால் வாசி பேர், ஒரு பாட்டையும் கவனியாமல் நல்லா கடலை(ஆண் vs பெண்),பட்டறை(ஆண் vs ஆண்) , பொங்கல் (பெண் vs பெண்) போட்டு கிட்டு இருந்தார்கள்.

நம்மள மாதிரி சைட் அடிக்க யாரும் வரலையா ?? எல்லோரும் எப்படி இருந்தாங்க ??

பெயரில்லா சொன்னது…

//கொங்கு தெலுங்கு மக்களா இருக்காங்க ?

அட ஆமா பா!! ஒரு வேல நமக்கு புரிய கூடாதுன்னு இப்படி பாடராங்களோ

மந்திரன் சொன்னது…

//நீங்க அங்க புக் ஸ்டால் போட்டு இருந்தீங்களா ??//
என்ன வச்சு காமெடி கீமடி பண்ணலையே ?

//நம்மள மாதிரி சைட் அடிக்க யாரும் வரலையா ?? எல்லோரும் எப்படி இருந்தாங்க ?? //
ஏன் எங்களையும் அந்த கூட்டணியில் சேற்குறீங்க .. நான் எல்லாம் ரொம்ப நல்லவனாக்கும்
ஆனா உங்களுக்காக : ஒன்னும் தேரலையே

ஸ்ரீதர்கண்ணன் சொன்னது…

நல்லா கடலை(ஆண் vs பெண்),பட்டறை(ஆண் vs ஆண்) , பொங்கல் (பெண் vs பெண்) போட்டு கிட்டு இருந்தார்கள்.

:)))))

மந்திரன் சொன்னது…

நன்றி ஸ்ரீதர்கண்ணன் . உங்கள் வருகைக்கும் , சிரிப்பிற்கும்