மந்திர ஆசைகள்

12/21/2009

வேணாம் வேட்டைக்காரன் : வடிவேலு

விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கறது என்ன சுகம் ! என்ன சுகம் என்று வடிவேலு முனகும் போது ,

 "தலை, விஜய் வந்து இருக்கிறார் " என்று பூச்சியப்பன் சொல்ல .. டரியலாகிறார் வடிவேலு.  

இந்த விஜெய்க்கு, கட்டம் சரியில்லை . சரி வரச் சொல்லு

ங்ணா , எப்புடிங்க்னா இருக்கீங்க ? என்று விஜய் பல் இளிக்க,

இதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ..இப்பதானே நீ வந்து இருக்க , என்ன விஷயம் கண்ணா ?

நம்ம படம் பட்டை கிளபுதுங்க ங்ணா,நீங்க வந்து பார்க்கணும் ங்ணா.

என்னடா இவன் , ஓவரா பம்முறான் , பின்னாடி ரொம்ப ஆட்டுறான் என்று வடிவேலு நினைத்துக் கொண்டே ,

 ஏய் , என்னை வச்ச்சு காமெடி கீமடி பன்னைலையே ?

  ங்ணா , நான் ஒரு தடவை கமிட்ட ஆயட்டேன்ணா , என் பேச்சை நானே கேட்க்க மாட்டேன்னா ங்ணா..

கொய்யால , உன் பேச்சை நீயா கேட்கலைன்னா வேற எந்த நாய் கேட்க போறாங்க .. இப்பவே கண்ணை கட்டுதே .. ஆமாம் , ஏன் இப்ப இதை சொன்ன ?  

படம் பார்க்க வாங்க .. 

 என்ன , இவ்வளவு பாசமா கூப்பிடுறான் ..போய்த்தான் பார்ப்போமே ..

தியட்டேர் முன் ஒரு பெருங் கூட்டம் ..  

அட , படம் நல்ல இருக்கும் போல , கூட்டம் களை கட்டுதே , நாமத்தான் தப்பா பேசிட்டோமோ..

பாஸ், நான் மோசம் போய்ட்டோம் ..என்றான் பூச்சி . என்னடா சொல்ற ? அது படம் பார்க்க வந்த கூட்டம் இல்லை . படம் பார்க்க வேண்டாம் அப்படின்னு சொல்ல வந்த கூட்டம்மாம் ...

என்னடா சொல்ற , பீதியில நான் ஒன்னுக்கு போய்ட போறேன் ..அம் ... சரி விடுடா .

.என்னை ரொம்ப நல்லவன் நினைத்து படம் பார்க்க சொல்லி இருக்காங்க.. என்னத்தான் அதுல இருக்கன்னு பார்ப்போமே ..

3 மணி நேரம் கழித்து ..

தீவிர சிகிச்சை பிரிவில் , அப்போல்லோ மருத்துவ மனையில் , வடிவேலு அனுமதி என்ற செய்தி சன் T.V இல தலைப்பு செய்தியாக சொல்லப்பட்டது.

அப்போது பூச்சி வந்து, வடிவேலு விடம் ,
 
தலை , பத்திரிகை காரங்க எல்லாம் வந்து இருக்காங்க .. உங்கள் கிட்ட எதுவோ கேட்கணுமாம் ..
 
என்னவாம் ?
 
தெரியல , ஆனால் , வேட்டைக்காரன் பத்தி மட்டும் எதுவும் சொல்லிடாதீங்க மிரட்டிக் கூட கேட்பாங்க , அப்படியும் சொல்லிடாதீங்க .. அண்ணே , அடிச்சு கூட கேட்பாங்க .. அப்படியும் சொல்லிடாதீங்க ..

ஏன் டா ..அப்புடி ?
 

படம் பார்த்ததா வெளியே சொன்னால் , அமைதிக்கான நோபெல் பரிசு கொடுத்திடுவாங்களாம்.அவ்வளவு தான் நான் சொல்லுவேன் என்று பூச்சி பயம் காட்ட,  

என்னடா சொல்ற . நான் பாவம் ..அம் ..

பத்திரிகை காரர்கள் கூட்டத்தில் ..

படம் போட்ட ரெண்டே நிமிசத்தில ஒரு பாட்டு வந்துச்சு .. சரி ஓடி போய்டலாம் அப்படின்னு நினைச்சு , ஒரு ஸ்டேப் அடி வச்சு நகர்ந்தேன் ..
ரெண்டே ஸ்டேப் தான் ,
எப்படி கண்டு பிடிச்சான்களோ ..
கப்புனு பிடிச்சு , கட்டி போட்டு படம் பார்க்க வச்சானுங்க .. 

சரி , அனுஷ்கா புள்ளை வருமே , அப்படின்னு நம்பி பார்த்தேன் .. என்னை பாவம் செஞ்சேன்னு தெரியல ..அப்புறம் அந்த புள்ளைய காணோம் .. கண்ணை இறுக்கி முடிகிட்டு உட்கார்ந்தேன் ..

எல்லாம் முடிச்சதேன்னு , கிளம்புலாமுன்னு பார்த்தா , அப்ப ஒருத்தன் , ஓடி வந்து ,

"இவன் இவ்வளவு அமைதியா பார்க்குறான் . நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கிறான் அப்படின்னு சொல்லி , பக்கத்து ஊருல ஓடுற "வேட்டைக்காரன்" படத்துக்கு பேக் பண்ணி அனுப்புலாம் " அப்படின்னு சொல்றான் ..
 

நாலு தடவை ஹார்ட் அட்டாக் வந்து போச்சு .. அப்ப பார்த்து , விஜய் என் கிட்ட வந்து ,
ஒரு கேள்வி கேட்டாருங்க ..அப்புறந்தான் இங்க வந்து அட்மிட் ஆயிட்டேன் ..

பத்திக்கைகாரர்கள் அனைவரும் கோரசாக ..அது என்ன கேள்வி ?..

அது வந்துன்ங்க ..

இருங்க ஒரு பொசிசன்ல நின்னுகிறேன்.
 


அவன் கேட்டான் ..
"தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான் ..
அது என்ன ? "
 
பத்திரிக்கரார்கள் அனைவரும் அப்போல்லோவில் அனுமதியாம் ..

  டிஸ்கி : வேட்டைக்காரன் படத்தை ஆஸ்காருக்கு அனுப்ப இந்திய அரசு முடிவு செய்து உள்ளதாம் ..


டிஸ்கி 2:ரொம்ப கேவலம்மா பின்னூட்டங்கள் வருது ..விஜய் தான் கேவலமா நடிக்கிறார்..அவருக்கு நடிப்பு வராது ..ஒத்துக்குறேன் ..

அவர் ரசிகர்களும் அவ்வழி தானா ? நாகரீகமாக எதிர்ப்பை காட்டினால் கண்டிப்பாக உங்கள் எதிர்ப்பு பதிவு செய்ய படும் .5 பதில் செப்பியவர்கள்:

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

ஆங்கில வேட்டைக்காரன் போஸ்டர் டாப்பு..,

பெயரில்லா சொன்னது…

supperb...annan.
vadivelu've vanthu ninnu avasthaippadura maathiri irukku.ithaivaichu neenga innu innum pannanum'nu keddukkaren...
supperb....

மந்திரன் சொன்னது…

அனானி , உங்க பேரை சொல்லி இருக்காலாம் ..

இப்படி உசுப்பேத்தி , உசுப்பேத்தி உடம்பை ரன கல படுத்திடுறாங்க ..

vinu சொன்னது…

FLASH NEW: வேட்டைக்காரன் படம் வருதுன்னு நியூஸ் கேள்விப்பட்டு ,ஆஸ்கர் கமிட்டிய இழுத்து மூடிட்டாங்களாம் .........
சங்கத்த உடனே கலைங்கப்பான்னு சத்தம்தான் அங்க கேக்குதாம்

bhuvan2uall சொன்னது…

நகைச்சுவை நல்லா இருக்குனே.. (இத விஜய் ரசிகர் கண்டிப்பா நகைச்சுவைன்னு எதுக்க மாட்டாங்க!!)