மந்திர ஆசைகள்

12/28/2009

வக்கிரம் யாருக்கு ?

வக்கிரம் யாருக்கு ? என்று கேட்டால் , இப்போதைக்கு செக்ஸ் அர்ச்சகர் "தேவநாதன் " என்று நச்சுன்னு பதில் வரும் ..

ஆனால் உண்மையில் அது யாருக்கு என்றால், நம்மில் 90% மக்களிடம் தான் (அட என்னையும் சேர்த்துதான் ) உள்ளது .


மனிதன் தோன்றி எத்தனை கோடி வருடம் என்று தெரியாது . ஆனால் நாளை பிறக்க போகும் மனிதனுக்கு கூட செக்ஸ் பத்தி முழுவதும் தெரியாது என்பது நிதர்சன உண்மை .


அதை நாம் பரம ரசிகமாக ரசிக்கிறோம் . மெதுவாக அதன் பல பரிமாணங்களுக்கு அடிமையாய் இருக்கிறோம் .இதை பல பேர் ஒத்துக் கொள்வதில்லை .


"நான் தினமும் திருவாசகம் படிக்கிறேன் , கீதை படிக்கிறேன் .
ஐந்து முறை தொழுகிறேன் .. பல கோவில்களுக்கு போகிறேன் .
வருகிறேன் , போகிறேன் , செய்கிறேன் .நடக்கிறேன் ...அது , இது " என்று பலவாறு சொல்லி
நான் ரொம்ப நல்லவன் என்ற மாயை நாம் ரசிக்கிறோம் .


இப்பொழுது மிக சூடான செய்தி "கருவறையில் செக்ஸ் ".
இதை ஒரு செய்தியாக யாரும் படிப்பதில்லை .இது ஒரு வெறுக்கும் செய்தி என்றால்
"புதிய படங்குளுடன் செக்ஸ் அர்ச்சகரின் லீலைகள் " என்று தலைப்பு செய்தியாக "நக்கீரன் " இதழ் போட்டு இருக்க கூடாது .
அதை நாம் வாங்கி படிக்கவும் கூடாது .


ஆனால் நடந்ததது என்ன ?
நான் வழக்கமாக புத்தகம் வாங்கும் கடைகாரார் தந்த தகவல்
"எல்லா புக்கும் போய்டுச்சு , தம்பி , ஒன்னே ஒன்னு உனக்கு வச்சி இருக்கேன் "
அப்படி என்ன அண்ணாச்சி அது இருக்கு , எதுனா ப்ரீயா ?
போங்க தம்பி , எல்லாம் அந்த காஞ்சிவரம் அசிங்கம் தான் காரணம் "
என்று ஒரு மாதிரி சிரித்தார் ..


என்னை நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான் .
அந்த செயல் ஒரு வெறுக்க தக்க நிகழ்வு என்றால் இது எப்படி சாத்தியம் .??


என் நண்பர்களிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது,
"அந்த" மாதிரி இடங்களுக்கு போய்க்கிட்டு இருப்பதை நிறுத்தி விட்டதாக ஒரு நண்பன் சொன்னான் ..
எனக்கோ அது மிக பெரிய அதிர்ச்சி .இவனா இப்படி , ஏன் ?
ஆனால் , மற்றவர்களோ ,
" விடு மச்சி , இனி போகாமல் இருந்தால் சரி .." மிக இலகுவாக எடுத்துக் கொண்டார்கள் .


அவர்களிடம் நான் நினைத்ததை கேட்டால் ,
"சாமியார் , வாத்தியார் , பூசாரி அவன் , இவன் என்று யார் யாரரோ தப்பு செய்கிறார்கள் . தப்பை தப்பா பண்ணினா தானே மாட்டுவோம் ..
போடா , பெரிய பருப்பு நீ , எல்லாரும் ராமன்தான் சந்தர்ப்பம் கெடைக்காத வரை "
என்று பதில் வருகிறது .


பின்னர் ஒரு நண்பன் சொன்னான்
" அம்மணமாக எல்லாரும் இருக்கிற கூட்டத்தில டிரஸ் போட்டுக்கிட்டு இருகிறவன் தான் அசிங்க படனும் ".
சில விஷயங்கள் என்னை உறுத்த தொடங்கின .
என்னுடைய வருத்தம் , அவர்கள் ஒழுக்கமாக இருக்க முயற்ச்சிக்க வில்லை என்பதில்லை ..
ஆனால் "ஒழுக்கமாக இருப்பது கேனத்தனமானது " என்று நினைக்கும் மனபாங்கு என்னை தடுமாற செய்கிறது ....


மெதுவாக நம் நெஞ்சில் சில விசங்கள் விதைக்கப் பட்டு கொண்டு இருகின்றன .
வக்கிர செய்திகள் எல்லாம் எப்படி எல்லாராலும் (நான் உட் பட ) விரும்பி படிக்க முடிகின்றது ?
மற்றவர்களின் அந்தரங்களை அவர்களுக்கு தெரியாமல் , நாம் தெரிந்து கொள்ள முற்படும் எண்ணமே இதற்க்கு எல்லாம் ஒரு விதை .


நாம் அவர்களை பற்றி படிக்கிறோம் , பார்க்கிறோம் . இது எல்லாம் ஒரு பரவசத்தை நம்முள் ஏற்படுத்துகிறது . எதுவே எல்லாவற்றுக்கும் காரணமாகிறது .
நான் ஒன்றும் யாரையும் குறை சொல்ல வில்லை .
அண்ணாந்து பார்த்து எச்சிலிட்டால் யார் மேல் அது விழும் என்று எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்று ஆசை படுகிறேன் .


ஏன் இந்த பதிவுலகத்தில் கூட செக்ஸ் என்று ஒரு வார்த்தை எழுதி விட்டால்
கொய்யோ , முய்யோ என்று கத்துவார்கள் ஏராளம் ..
அவர்கள் கூறுவதெல்லாம்


உங்கள் பதிவை படிக்க கொஞ்சம் பயமாக இருக்கிறது .
ஏன் இப்படி எல்லாம் எழுதிகிறீர்கள் ?
வேற தலைப்பே இல்லையா ?
இது எல்லாம் உனக்கு தேவையா ?


நான் ஒன்றும் இங்கே செய்முறை விளக்கம் கொடுக்க பதிவு எழுத வில்லை .
நம்மை, நாம் சீர் தூக்கி பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது .


நாம் இன்னும் எத்தனை வருடம் ,இப்படி முகமூடி போட்டுக்கிட்டு வாழ போகிறோம் .
முகமூடிக்காக நாம், நம் முகத்தை இழந்து விட கூடாது .
நமக்கு நாமே உண்மையாக இல்லை என்றால் ,
பின் யாரிடம் உண்மையாக இருக்க போகிறோம் ?


எதோ என் மனதில் தோன்றியதை கிறுக்கி விட்டான் இந்த கிறுக்கன் .
தவறு இருப்பின் பொறுத்தருள்க .


13 பதில் செப்பியவர்கள்:

ஜிம்பலக்கடி பம்பா... சொன்னது…

Summa Nachunnu solliteenga boss

tamiluthayam சொன்னது…

மாட்டாத வரை எல்லோருமே யோக்கியர்கள் தான் சார்

மந்திரன் சொன்னது…

@ஜிம்பலக்கடி பம்பா
உங்க பேரு நல்ல இருக்கு ....

@tamiluthayam
அது தான் பாஸ் , நானும் சொல்ல வந்தேன் ..

பெயரில்லா சொன்னது…

neer sonnathu correct

கணேஷ் சொன்னது…

என்னாச்சி பாஸ்..

ஏன் இந்த கொலைவெறி? நல்லாத் தானே போய்கிட்டு இருந்திச்சி?

ஆனாலும் நீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்தது. சூப்பர். தொடரவும்.

ஒரே ஒரு விஷயம்... சமுதாயத்தின் மீது நம்மால் கோபப்பட முடியாது. ஏனெனில் நாமும் நம்மை சுற்றியுள்ள இடமும் தான் சமுதாயம். இது நான் சொல்லவில்லை.. ஏதோ ஒரு பெரிய தலை சொன்னது,

பெயரில்லா சொன்னது…

i continously read your blog this is really very nice. everyone should understand that.
i dont know to type in tamil so only in english.
i dont want to insult tamil by typng it in english

வால்பையன் சொன்னது…

கிசுகிசு எழுதுனாலே ஓடிபோய் புக்கு வாக்குற கூட்டம்னே நம்ம கூட்டம்!

மந்திரன் சொன்னது…

@கணேஷ்
//ஏன் இந்த கொலைவெறி? நல்லாத் தானே போய்கிட்டு இருந்திச்சி?//
நாங்களும் சீரியஸ் ஆக எழுதுவோம்ன்னு காட்டத்தான்..

@வால்பையன்
நீங்க சொல்றதும் சரிதான் ...

Bhuvanesh சொன்னது…

அருமையான பதிவு மச்சி..
பொதுவா நம்ம எல்லோருக்கும் அடுத்தவன் பெட் ரூம் ல நடக்கறத தெருஞ்சுக்க ஆர்வம் அதிகம்!!

குந்தவை சொன்னது…

ம... எல்லாவற்றிர்க்கும் காலம், இடம் என்று உண்டு.
நீங்களும் இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு(:) ) உங்களுக்கே புரியும்.

மந்திரன் சொன்னது…

@குந்தவை
//நீங்களும் இன்னும் கொஞ்சம் வளர்ந்தபிறகு(:) ) உங்களுக்கே புரியும்.//

எதோ பெரியவங்க சொல்றீங்க ..அப்ப சரியாகத்தான் இருக்கும் ..

cheena (சீனா) சொன்னது…

அன்பின் மந்திரன்

சிந்த்னை வித்தியாசமாக இருக்கிறது - நாம் எல்லோருமே ஏதேனும் வித்தியாசமாக இருப்பின் உடனே அதனைப் பற்றித் தெஇர்ந்து கொல்ளும் ஆர்வம் உடையவர்கள். அதனால் தவறில்லை- அதனால் பாதிக்கப்படக்கூடாது - அவ்வளவுதான்.

ம்ம்ம்ம் நல்வாழ்த்துகள் மந்திரன்

மந்திரன் சொன்னது…

@Cheena
பெரிய ,பெரிய தலைகள் எல்லாம் என் தளத்துக்கு வருவது எனக்கு மகிழ்ச்சி அழிகிறது
நன்றி உங்கள் வருகைக்கும் , ஊக்கத்திற்கும்