மந்திர ஆசைகள்

1/22/2009

தியாகராஜர் மஹா உற்ச்சவம் - அப்படின்னா? புரியும் ஆனா புரியாது.

ஒரு நண்பனின் அன்புத் தொல்லையின் காரணமாக நானும் சென்றேன் தியாகராஜர் மஹா உற்ச்சவத்திற்க்கு .
 உள்ளே போனதும் தோன்றியது என்னெவென்றால் "புரியும் ஆனா புரியாது".
 வழி நெடுக ஒரே வங்கிகளின் அணிவகுப்பு ..
 விள்ம்பரங்கள்.. சாமியோவ்! இவ்வளோ பணம் இருக்கா ?
 ஆனா படிச்ச மாக்காங்களுக்கு ஏன் கடன் கிடைக்கல? அப்படின்னு கேட்டா , பதிலாக கிடைப்பது " இருக்கு ஆனா இல்லை".
போண்டா கடைகளில் கூட்டம் கண்னை கட்டுது.ஆனா புத்தக கடைகளில் என்னை தவிர எந்த நாயும் இல்லை.
அந்த புத்தக கடையில்,கிடார் கற்றுக்கொள்வது எப்படின்னு ஒரு புத்தகம் ..படிச்சு எப்படி கற்றுக் கொள்வது அப்படின்னு இந்த சின்ன மூளையில் தோன்றியதால்,கேட்டேன் ஒரு கேள்வி . "இந்த புக்குக்கு ,கிடார் இலவசமா கொடுப்பீங்களா?". பதிலாக கிடைத்தது ஒரு வெறித்தனமான பார்வை .
 வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்ததால் எடுத்தேன் ஓட்டத்தை. அப்புறம் தியாகராஜரின் சாமாதிக்கு சென்றேன். பிணத்தினை கோவில் வழியாக கொண்டு சென்றால் ஆகம விதிகளை துணைக்கு அழைப்பவர்கள் அங்கே மனமுருகி பாடி கொண்டு இருந்தார்கள்."புரியுது ஆனா புரியல" ????!!!!.
 பாடல்களை, மன்னிக்கவும் கீர்த்தனைகளை எழுதியிருந்தார்கள் கொங்கு தெலுங்கை கன்னித் தமிழில் .பிரன்ச்சு தாடி வைத்து பக்கா Formal ஆடையில் நான் அங்கு சென்று இருந்தேன். என்னை பல கொலைகளில் இருந்து அதுதான் காப்பாற்றியது.
ஆச்சாரமாக நின்று கொண்டு இருந்த் ஒரு அவாளிடம் இந்த் கீர்த்தனைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டது ஒரு குத்தமா? மீண்டும் ஒரு கொலை வெரி பார்வை.
அவருடன் கொஞ்சம் பேசலாம் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே, பாடகி மஹதி உள்ளே பிரவேசித்தார். என்னா அழகு?. ஒப்பனை கலைஞனின் கை வண்ணம் தான் அதற்க்கு காரணம் என்று சொன்னால் நீங்கள் கல்லாலே அடிப்பீர்கள் என்று தெரியும்.
அப்ப பார்த்து," அண்ணே இவங்க எந்த படத்துல கதாநாயகி" என்று ஜொல்லு வடிய ஒரு பொடியன் கேட்டானே பார்க்கணும் . ஏண்டா இவ்வளோ கூட்டம் என்று இந்த குழந்தைக்கு அப்பத்தான் புரிந்தது . ஆனால் மமதியின் கணவர் யாராக இருக்க கூடும் என்று நினைத்து கொண்டு இருக்கும் போதே பஜ்ஜியும் கையுமாக நான் ஒருத்தரை சந்தித்தேன்.

 அவர் என் நண்பனுடைய நண்பனின் அண்ணனாம். என் நண்பனின் நண்பனுக்கு மஹதி அண்னி யென்றால் அந்த பஜ்ஜிவாலா யார் என்று நான் சொல்லத் தேவை இல்லை.(நல்லா குழப்புறேனா?)
என் நண்பனும் , மஹதியின் கணவரும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அங்கே மஹதி இல்லை, நானும் இல்லை.

 இல்லப்பா அவங்க உள்ளே பாடிக் கொண்டு இருந்தார்கள். என்னடா இவன், பாட்டை அதான்பா கர்நாடக சங்கீதத்தை பத்தி சொல்லவே இல்லைன்னு ? சொல்றேன்,சொல்றேன். நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு.என்னா அவசரம்?

 அங்கே இருந்த கூட்டத்தில் ஒரு கால் வாசி பேர், ஒரு பாட்டையும் கவனியாமல் நல்லா கடலை(ஆண் vs பெண்),பட்டறை(ஆண் vs ஆண்) , பொங்கல் (பெண் vs பெண்) போட்டு கிட்டு இருந்தார்கள்.ஒன்னும் புரியாமல் நான் நின்று கொண்டு இருந்த போது, பல பேர் ஒரு வகையா தலையை , கையை ஆட்டி கொண்டு இருந்தார்கள். சரி விடுங்க.நாமலும் அதே மாதிரி கை, தலையை ஆட்டி கொண்டு இருந்தென்.

 பக்கத்தில் இருந்த ஒரு பெருசு,கிட்ட வந்து ,புது பையன் நல்லதான் பாடுறான். ஆனா பின்னாடி அவுங்க சரியா வாசிக்கல இல்ல. ஸ்வரம் சரியா இல்லை.4 கட்டை பதிலா ,5 கட்டை போட்டு கிட்டு இருகாங்க. .எப்போ திருந்த போறோங்களோ என்றார்.

7G ரெயின்போ காலனி கதாநாயகன் மாதிரி நான் சிரித்த சிரிப்பை வைத்தே நம்மளை சரியாக கனித்த அந்த பெருசை நான் பாரட்டுகிறேன். ஓத்துக்குறேன் பெருசு பெருசுதான்.

ஒலி பெருக்கிகள் ஒவெர் டைம் வேலை பார்த்ததால் என்னொவோ இனிக்க வேண்டிய இசை, செவியை கிழித்துக் கொண்டு இருந்தது .நானும் எவ்வளவு நேரமா சங்கீதம் தெரிஞ்ச மாதிரியே நடிக்கிறது?. முடியல. சத்தியமா முடியல. அங்கே இருந்து உடனே வெளிநடப்பு செய்தேன்.

 அங்கே என்ன கொங்கு தெலுங்கு மக்களா இருக்காங்க ? நம்ம தமிழ் மக்கள் தானே. பின்ன ஏன் ஒரு வார்த்தை கூட தமிழில் இல்லை. கேட்டா, கழுதைக்கு தெரியுமா சங்கீத வாசனை அப்படின்னு கேட்பாங்க ? . என்ன சொன்னாலும் , எப்படி பாடினாலும் ,புரியவில்லைன்னாலும் , அடுத்த தியாகராஜர் மஹா உற்ச்சவத்திற்க்கு இப்பவே ரெடியாய் இருக்காங்க.

 அடி வயிறு வரை இனித்தது ஆண்டவர் கடை அசோகா அல்வாவும், டீ கடையில் பாடிய நாக்க முக்க பாடலும். பொது மக்களை சென்று அடையாத எந்த கலையும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. எப்போ புரிய போதோ அவங்களுக்கு ?


1/12/2009

இப்பவே கண்ணை கட்டுதே

நமது நாட்டில் உள்ள எல்லை சாமிகள் யார் யாருன்னு தெரியுமா?
நமது உள் துறை அமைச்சர் ,நமக்காக ஒரு புதிய உளவு துறையை உருவாக்க போறாராம் . நாம் இனி நிம்மதியாக இருக்கலாம் .

இனி ஒரு தீவிரவாதி கூட நம் நாட்டில் நுளைய போவது இல்லை . குண்டு இல்லை .
மனித பலிகள் தேவை இல்லை .
தாலிகள் இனி தூக்கு மேடை ஏற போவது இல்லை .
அம்மா சாமிக்கிட்ட போய்கிட்டாங்க அப்படின்னு ஒரு பிஞ்சுக்கிட்ட பொய் சொல்ல தேவை இல்லை .
நாளைய மன்னர்கள், இன்று கைகளை இழக்க தேவை இல்லை .

 இவை எல்லாம் நடக்க போவதுன்னு நினைக்கிறதற்க்கு முன்னாடி, நம்மிடம் உள்ள இந்த படைகளை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுகுங்க .
 1.உளவுத் துறை.
2.அமைச்சரவை செயலாக்கத்தின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா )
3.வருவாய்த்துறை உளவு இயக்கம்.
 4.மத்திய பொருளாதார உளவுத் துறை.
 5.அமலாக்க இயக்கம்
6.போதைப்பொருள் கட்டுபாட்டுத் துறை.
 7.சிறப்பு எல்லைப் படை.
 8.எல்லை பாதுக்கப்பு படை.
 9.மத்திய இடர் காப்பு படை.
10.இந்திய திபத் எல்லைக் காப்பு படை.
11.மத்திய தொழிற்ச்சாலை பாதுகாப்பு படை.
12.தேசிய பாதுகாப்பு படை.
 13.அசாம் சுழற் துப்பாக்கி படை.
 14.சிறப்பு பிரிவு-அந்தமான் மற்றும் நிகோபார் பாதுகாப்பு படை.
15.குற்றப் பிரிவு குபி,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி
16.சிறப்பு பிரிவு - லட்சத் தீவு காவற் படை.

 தமிழ்நாடு அளவில்
 1.குற்றப்பிரிவு சி.ஐ.டி
 2.சிறப்பு புலனாய்வு குழு
3.போதைப் பொருள் தடுப்பு பிரிவு
4.கொள்ளை கூட்டத் தடுப்புப் பிரிவு
 5.சிலைத் திருட்டுப் பிரிவு
 6.சிவில் சப்பளை சி.ஐ.டி
7.சிறப்பு அதிரடி படை
8.கமாண்டோ படை
9.மாவட்ட குற்றப்பிரிவு

 இன்னும் ,இன்னும் நெறையா.... இனி மேல் உருவாக போகிற அந்த ஒரு அமைப்பு தான் ,நம்மை காப்பத்த போவுதுன்ன ..
 இவங்களை என்ன பண்ண போறங்க .?
 இன்னொரு குண்டு வெடிப்பு ... இன்னொரு புதிய அமைப்பு .. விளம்பிரங்களுக்கு இடையே துக்கம் விசாரிக்க போகின்றன நம் தொலைக்காட்சிகள். எங்களை எந்த சாமியும் காப்பத்தல.. எங்களுக்கு எந்த சாமியும் தேவை இல்லை. குறைந்த பட்சம் சாத்தானாவது வந்து நம் கவலை தீர்த்து வைக்காதா?


1/08/2009

அட கொய்யால , இப்படியா ஏமாத்தறது ?

நாம எழுதிறத யார் பார்க்க போறா ?

இந்த பதிவை யார் படிக்க போறா ?

அதனால நமக்கு என்ன லாபம் .

இப்படி நினைத்து சுமார் 6 மாசம் ஒன்னும் எழுதல. (அதுக்கு முன்னாடியும் ஒன்னும் கிழிக்கல .)
ஒரு வருஷம் இந்த தமிழ் வலை உலகை ஒரு பார்வையாளனாக பார்த்து கொண்டு இருந்தேன் . ஆனால் நீங்கள் நினைப்பதை போல இந்த தமிழ் வலை உலகம் ஒன்றும் உத்தமம் அல்ல . பல வலை உலக பிரம்மாக்கள் செய்யும் ,செய்த உள் குத்துகளை சில சூழ்ச்சிகளை நீங்களும் பயன் படுத்தி நீங்களும் வலை உலக பிரம்மாவாக மாறுங்கள் .

அதில் சில இதோ .

* திடீரென உங்கள் இணைய தளத்தை யாரோ hack செய்து விட்டதாக ஒரு புரளியை கிளப்பி ,அதை யாராவது ஒரு பெரிய வலை புள்ளியின் பெயரை சொல்லி அவரின் புகழை உங்களுக்கு சாதகமாக செய்து கொள்ளுங்கள் ..(இப்போ உங்களுக்கு இட்லி வடை ஞயாபகம் வந்தால் நான் பொறுப்பல்ல ).

* ரஜினி, ஞாநி ,வால்பையன் ,தமிழச்சி போன்ற வலை பிரபலங்களை மானா வாரியாக நீங்கள் திட்டுங்கள் . பிடிக்குதோ இல்லையோ கண்டிப்பாக உங்களுக்கு பல பின்னூடங்கள் நிச்சயம் .(நீ என்ன விருந்தாளிக்கு பொறந்தவன ? போன்ற கேள்விகளை தாங்க நீங்க ரெடி என்றால் இது உங்களுக்கு ஓகே )

 *ரொம்ப கேவலமா தலைப்பு கொடுத்து பாருங்களேன் ..உதரணத்திற்கு 16 வயது பெண்ணை 18 தடவை கற்பழித்த 95 வயது வாலிபர் ... சொன்ன நம்ப மாட்டிங்க , கண்டிப்பா பல repeat பார்வையாளர்கள் உங்களுக்கு உண்டு .

*கதை எழுவது ரொம்ப ஈசி . பொண்ணு ,பார்த்தால் ,இளித்தல்,முக்கள் ,முனகல் , அப்புறம் தடவல் ..கொஞ்சம் கருத்து . இது தான் அனைத்து காதல் கதைகளின் சாராம்சம் (நான் எழுதிய கதை உட்பட )

* உங்கள் page counter-ஐ போலியானதாக வைக்கலாம் .. ஒரு நாளில் 1000,2000 என பொய் சொல்ல இது உதவும் ... இது எப்படி சாத்தியம் என்று சின்ன புள்ள தனமா கேட்காதிங்க .Browser Simulator அப்படின்னு சில கணினி மென் பொருட்கள் உண்டு . அதை பயன் படுத்தி உங்கள் page counter-ஐ நீங்கள் 1000,2000,10000 என உயர்த்தி ,நீங்கள் வலை உலக ராஜா என தம்பட்டம் அடித்து கொள்ளலாம் (இப்படி யா ஏமாத்தி கிட்டு இருகாங்க , பாவி பயல்க )

 *உங்களுக்கு ஒருத்தரை பிடிக்கவில்லை என்றால் உடனே அவரை பற்றி ஓஹோ வென பாராட்டி ஒரு பதிவு போடுங்கள் ..என்னடா பிடிக்காதவனை பத்தி எதற்கு பதிவு என்று நீங்கள் கேட்டால் ,நீங்கள் இன்னும் அரசியலில் நிறைய கத்துக்கணும் .. முதல்ல பாராட்டி ஒரு பதிவு ..பின் அனானியாக நீங்களே வந்து சும்மா கிழி கிழின்னு கிழிச்சுருங்க .. இப்ப தெரியுதா ஏன் பல பாராட்டு பதிவுகள் வருது என்று ? (அட கொய்யால ....அரசியலில் ரொம்ப தூரம் போவனுமோ )

எப்படி சமர்த்தியம்மாக பின்னூட்டம் இடுவது ...திட்டுவது .... இதை பற்றிய மர்மங்கள் வரும் பதிவில் வலை உலக பிரம்மாக்களின் முகத்திரையை கிழிக்க நீங்களும் பின்னூட்டம் இட்டு சொல்லலாம் tamilsh ல உங்க முத்திரையை குத்திட்டு போங்க