விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
Categories
என்னதான் நடக்குது . நான் தெரியாமத்தான் கேட்கிறேன் என்ன நடக்குது ? அரசியல் நடக்குதா இல்லை அராஜகம் நடக்குதா . அப்படி என்ன செய்து விட்டார் .என் கட்சி காரர் நயன்தாரா . எதோ கொஞ்சம் அப்படி ,இப்படி ஆசைப்பட்டு பிரபுதேவாவை லவ் பண்ணிட்டு இருக்கார் . கல்யாணம் கூட பண்ணிக்க போறார் . பிடிச்சா , கலையான பந்தியில் உட்கார்ந்து ஒரு முக்கு முக்கிட்டு போக வேண்டியது தானே . அதுதானையா உலக வழக்கம்.
அதை விட்டுட்டு , சின்ன புள்ளத்தனமா , அடிக்க போறேன் , உதைக்க போறேன் , கல்யாணத்தை நிறுத்தப் போறேன் அப்படின்னு சில எதிர் கட்சிகள் பீதியை கிளப்புறாங்க . கடுபேத்துறாங்க யுவர் ஆனர் .
எனக்கு சுத்தி வளைச்சி பேசத் தெரியாது . டைரெக்டா விசயத்திற்கு வரேன் . நம்ம கைப்புள்ள பிரபு தேவா , பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொருத்திக் கூட லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்க போறார் . இதுல என்ன தப்பு ? இதே மாதிரி பொண்ணுங்களும் , புருஷன் இருக்கும் போதே இன்னொருத்தனை லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்கலாம் . அப்படி பண்ணினால் இந்த நாடு ரொம்ப நல்லா விளங்கிடும் . இது தெரியாம சில நொன்னைகள் , இது குத்தாமாம் , தப்பாம் அப்படி இப்படி
குதிக்கிறாங்க .
இது ஒரு காதல்
ஆதலால் காதலி
------------------------------
கண்களின்றி
உன்னால் காண முடிந்தால் ,
வார்த்தைகளின்றி
உன்னால் பேசப் முடிந்தால் ,
காற்றின்றி
இதயத்தால் சுவாசிக்க முடிந்தால் ,
உணவின்றி
உன்னால் புசிக்க முடிந்தால்
நீயும் காதலிக்கிறாய் .
சொர்கத்தின் கதவுகளை ,
நரகத்தில் தேடுவதைப் போல .
இனி ,
நண்பர்கள் தான் தெய்வம்
பெற்றோர்கள் தான் எமன் .
தாய்மொழியும் உன்னிடம் தடுமாறும் ,
வெட்கத்தை விலைக் கொடுத்து வாங்குவாய் .
வாழ்ந்து கொண்டே இறக்க தொடங்குவாய் .
வரமாய் நினைத்து சாபம் பெறுவாய் .
ஆனால் ,
முத்தத்தின் ஈரம் காயின் முன் ,
தோல்வி உன்னை தத்து எடுத்தால் ,
நடமாடும் கல்லறைகளில்
நீயும் ஒருவன் .
பொய்
--------------
ஷாஜகான் கூட
எனக்கு பிச்சைகாரன் தான் .
என்னை இங்கு
ஒரு தாஜ்மகால் அல்லவா
காதலிக்கிறது.
சொல்லிவிடு ஒருமுறையேனும்
காதலிக்கவில்லை என்றாவது .
நொடிக்கு ஒருமுறை நிகழும்
மரணம் நிற்கும்
என்னுடன் நிரந்தமாக .
பேசும் கண்களை நீ வரமாய்
பெற்றதால் என்னவோ
ஊமையாய் போய் விட்டன
அத்தனை மொழிகளும் .
சொல்லிவிடு
காதலின் விலையை
செய்கூலி இன்றி தந்து
விடுகிறேன் சேதாரமாக
என் உயிரை
உன் மௌனத்தை
உடைக்கும் அணுகுண்டை
தேடி கொண்டு இருக்கிறேன்
என் காதலின் ஆய்வகத்தில் .
எத்தனை முறை கொலை செய்தாலும் சலிக்க வில்லை . ரத்தம் பார்க்காமல் சித்தம் தணியாது . மீண்டும் இன்னொரு கொசு .
இன்னொரு பொய் . ஆயிரம் பொய் கடந்தால் என்ன ? அத்தனையையும் தின்று கொண்டு இருக்கிறது அடியில் இருக்கும் ஒரு மெய் .
தமிழை தமிழில் பேசினேன் .புரியவில்லையாம் .
எனக்கு புரியவில்லை .யார் தமிழன் ?
வெட்கத்தை கேட்டேன் . கொடுக்கிறேன் என்றாள் . எனக்கு தெரியவில்லை பதிலுக்கு என் கண்களை கேட்பாள் என்று .
மௌனத்தின் மொழியை புரிந்துக்க் கொள்ள அதனையை கொலை வல்லவா செய்ய வேண்டி யுள்ளது .
காதலை தின்று காமத்தில் கற்ப்பை வளர்க்கும் காதலர்களுக்கும் வழி சொல்கிறாள் மெரினாவில் கண்ணகி .
உலகின் செம்மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாம் . மரணத் தேதி சொல்லப்பட்ட இன்னொரு தாய் .
மொக்கை பதிவை தேடி நாம் போக கூடாது .அதுவா நடக்கணும் . நம்மை தலைகீழா போட்டுத் தாக்கனும் . அடி பின்னனும் . எப்பவுமே பயங்கரமாக வெறுப்பு ஏற்றணும் . அது தான் உங்களுக்கு இப்ப நடந்து கிட்டு இருக்கு .
Actually இந்த பதிவை நீங்க தேர்ந்து எடுக்கல . அதுவா நடந்துச்சு . அதான் மந்திரன் பதிவு . அவ்வளவு மொக்கை . கேவலமா எழுதுறான் .But மந்திரன் கிட்ட ஒரு மயக்கம் இருக்கு .
ஏய் , இன்னுமா தொடர்ந்து படிக்கீறீங்க ? .
நான் சீக்கிரம் ஒரு நல்ல பதிவை எழுதுறேன் .அதை பத்தி என்னோட அடுத்த பதிவில் சொல்லுறேன் . திரும்பி வந்து படிங்க .
நீங்க : போடா பன்னாடை ..
நான் : Thank you
நீங்க : வேணாம் டா
வேணாம் டா ,
பிரச்சனை ஆய்டும் .ஆமாம் உன் மனசுல இந்த பதிவை பத்தி என்ன சொல்லுது ?
நான் : சூப்பர் சூப்பர் அப்படின்னு சொல்லுது
நீங்க : நான் வேறு ஒரு நல்ல பதிவை படிக்க போறேன் . இது சரிபடாது மந்திரன் .
நான் : பிம்பில்லிக்கே பிலேப்பி ..
நீங்க : எவ்வளோவோ நல்ல பதிவு இருக்க ,நான் ஏன் இந்த
பதிவை படிக்கிறேன் ?
Bibliography :
என்னத்த சொல்ல????
இதுவும் கடந்து போகும் அப்படின்னு சொல்லிக்கிட்டு புள்ள குட்டிங்களை போய் படிக்க வைக்கிற வழியை பாருங்க ..
பெரியாரின் பக்தகோடிகளே என்னை ஆள் வைத்து திட்டுவதற்க்கோ , பின்னுட்டத்தில் பின்னி எடுப்பதற்கோ நானோ , இந்த பதிவோ வொர்த் இல்லை என்பதை எச்சரிக்கையாக சொல்லிகொள்கிறேன் .(நான் என்னை சொல்லிகிட்டேன் )
நான் கடவுள் மறுப்பாளான் தான் . ஆனால் "ஆம்புளைக்கும் ஆம்புளைக்கும் பொறந்தவன் தான் ஐயப்பன் " என்று சொல்லும் கூட்டத்தில் நான் ஒருத்தன் அல்ல . இந்த பதிவுலகத்தில் கடவுள் மறுப்பு என்பது விவாத பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறது .
பதில் தெரியாத கேள்விகளை கேட்டு ,
"உன்னை விட நான் அறிவாளி .பார், என்னிடம் நீ தோற்று விட்டாய் " என்று மெச்சிக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள் .
எனக்கு கடவுளை பிடிக்காது . பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் . ஆனால் அவரின் சில கருத்துகளை என்னால் ஏற்க இயலாது . அவரே கூறியது போல "நான் சொல்லவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயம் இல்லை . உங்களுக்கு தேவையானதை பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள் " .இதை நான் அப்படியே கடைபிடிக்கிறேன் .
கடவுள் மறுப்பாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ? , முழுமையாக அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் தானா ? . இதில் 3௦% பேர் , நான் அந்த புத்ததகத்தில் படித்தேன் ,இந்த புத்ததகத்தில் படித்தேன், அதான் எனக்கு கடவுளை பிடிக்காது . இவர்களுக்கு இன்னொரு புத்தகம் போதும் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைப்பதற்கு .
சிலர் அதீத வெறுப்பால் கடவுள் மறுப்பாளர்கள் என சொல்லிகொள்கிறார்கள் . அவர்கள் கேட்டதோ ,இல்லை அவர்களுக்கு பிரியமான ஒன்றை இழந்ததலோ இப்படி மாறுகிறார்கள் . இவர்கள்தான் விவாதத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் . திடிரென இவர்களுக்கு பிடித்தமானவருக்கு எதாவது ஆகிவிட்டால் , மீண்டும் கடவுளை நாடி செல்வார்கள் என்பது உறுதி .
இவர்களை எல்லாம் தாண்டி ஒரு சிறு கூட்டம் உள்ளது . அது தான் உண்மையில் கடவுள் மறுப்பை எந்த வித புறத் தூண்டல் இன்றி தனக்கு தோன்றிய கேள்விகளுக்கு விடையாக கடவுள் மறுப்பை தேர்ந்து எடுத்துக் கொண்டவர்கள் .இந்த கூட்டத்தில் கலக்கவே நானும் அனு தினமும் ஏன் கேள்வி தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறேன் .
எனக்குள் சில வருடங்களுக்கு முன் தோன்றிய கேள்விகளை பல நுறு பேருகளிடம் (பதிவுலகில் கூட ) கேட்டு அவர்களின் தேடுதலை உணர்ந்து இருக்கிறேன் . என்னை பொறுத்தவரை ,கடவுள் என்ற கோட்பாடுகளில் அடங்கி , நான் கடவுளாக பார்ப்பது இயற்கையை மட்டுமே . மற்ற எந்த மத கடவுளையும் என் மனம் ஏற்க்க மறுக்கிறது.
இப்படி வாய் கிழிய பேசுற நீ , ஏன் இப்படி "எனக்கு கடவுள் வேண்டும்" என்று தலைப்பு வைத்தாய் வெண்ணை , என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது . அதான் சொல்லுவோம்ல ..
இனி நான் சொல்வதை மந்திரனாக மட்டுமே பார்க்க வேண்டும் .
இது என் தனிப்பட்ட பாதிப்பு . பார்வை .
ஒரு வேளை, கடவுள் என்ற கொள்கை இல்லை என்றால் எப்படி இருந்திருக்கும் இந்த உலகம் ? . பெரியார் என்ற ஒருவர் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
சாமிக்கு என்று சொல்லி விரதம் இருந்து , வடை சுடும் அம்மாவிற்கு தெரியாமல் அதனை திருடி திங்கும் திரில் எனக்கு கிடைத்து இருக்காது . அதில் தம்பிக்கு கொஞ்சம் லஞ்சம் கொடுத்து , அவனையும் திருட சொல்லி , அதே சமயம் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து பின் சிரிக்கும் அந்த வில்லன் சிரிப்பு எனக்கு தெரியாமல் போயி இருக்கும் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
சாமிக்கு என்று சொல்லி , தலை கூட துவட்டமால் சாமிக்கு படையல் செய்ய அம்மா , காய்கறி வெட்டும் போது, அம்மா பாவம் என்று சொல்லி என் சின்னக் கைகளால் தலை துவட்டி விடும் போது . அம்மா , "என் செல்லம் . இப்படி வாடா" என்று சொல்லி கொடுக்கும் அந்த முத்தம் கிடைத்து இருக்காது.அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
தீபாவளி , பொங்கல் அன்று தான் வித வித சமையல் ,சக்கரை பொங்கல் , பட்டாசு அது , இது என்று ஒரு சந்தோஷ மயக்கம் இருக்கும் . எப்போது வேண்டுமானாலும் ,சக்கரை பொங்கல் சாப்பிடலாம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் சக்கரை பொங்கல் கூட தினம் சாப்பிடும் இட்லி போல மதிப்பிழந்து இருக்கும் . பண்டிகைகள் எந்த மூட நம்பிக்கையின் பெயரால் இருந்தாலும் அது குழந்தைகளுக்கு தரும் சந்தோசம் தனி. அதற்காக எனக்கு கடவுள் வேண்டும் .
முதுமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு , வறுமையின் விளிம்பில் வாடுபவர்களுக்கு சமுதாயம் தந்த கொடை ,"தனிமை" . பேசக் கூட யாரும் இல்லாத அனாதைகளாக திரியும் அவர்களுக்கு கல் என்றாலும் , கடவுள் சிலை முன் மண்டியிட்டு விழியோரம் கண்ணீரோடு முறையிடும் அவர்களுக்கு சிறு பாரம் மனதில் குறைந்தால் அந்த கடவுள் வேண்டும் எனக்கு .
கடவுள் நம்பிக்கை இல்லை எனில் தமிழ் நாட்டில் எந்த கோவில்களும் இல்லை. அப்படி எனில் ,நான் எங்கு போயி ராஜா ராஜா சோழனை பற்றி வியப்பது ? என் மூதாதையரின் கலை தாகத்தை எப்படி சொல்வது மற்றவர்களுக்கு ?
எனக்கு மாதா கோவில் குளிர்ச்சி பிடிக்கும் . அதன் அமைதிக்கு நான் அடிமை . ஒரு பொம்மைக்கு கட்டு பட்டு எப்படி ஒரு மனித கூட்டம் அமைதியாக செல்கிறது என்ற ஆச்சர்யம் வேண்டும் எனக்கு . நான் கோவில்களில் கடவுளை காண்கிறேன் . ஆம் , கடவுளை படைத்த மனித கடவுள்களை காண்கிறேன் . அவர்களின் உழைப்பை வியக்கிறேன் . இதற்காக எனக்கு கடவுள் வேண்டும் .
குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை .
நான் திராவிடன் இல்லை .
ஆரியன் இல்லை .
மனிதன் .
நமக்கு தெரிந்த வடிவேலு வசனங்கள் எப்படி நச்சுன்னு பொருந்துது பாருங்க ..
Login : சொல்லவே இல்லை
Training : முடியலே
New product : உக்காந்து யோசிபன்களோ
Concall - Why blood same blood..
Review - இப்பவே கண்ண கட்டுதே
Daily report - எதையுமே பிளான் பண்ணாம பண்ணகூடாது
Commitment - ஒபெநிங் நல்லாத்தான் இருக்கு ஆனா பினிஷிங் சரி இல்லையேப்பா
Project manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி
Regional Project Manager - என்ன வைச்சு காமெடி கிமெடி பண்ணலையே
HR Manager - கிளம்பிடங்காய கிளம்பிடங்காய
இந்த கோட்டை தாண்டி நீயும் வரகூடாது நானும் வரமாட்டேன் பேச்சு பேச்சாத்தான் இருக்குனும்
Supply Chain Manager - வேணா வலிக்குது அழுதரிவேன் ,ஒரு சின்ன புறாவுக்காக போரா ! பெரிய அக்கபோராகவா இருக்கு
Sales Manager - நா ரௌடி நா ரௌடி நா ரௌடி நா ஜெயிலுக்கு போறேன் நா ஜெயிலுக்கு போறேன் நா ஜெயிலுக்கு போறேன்
Marketing Manager -பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மென்ட் வீக்கு
Finance Manager - என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லீடான்யா
Circle Business Head - பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு
Promotion - வரும் அனா வராது
கடைசியா ..
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
Customer- மாப்பு .... வச்சிட்டான்யா ஆப்பு
டிஸ்கி : ஒரு மெயிலில் இருந்து சுட்டது . தமிழ் மொழி பெயர்ப்பு ,எடிட்டிங் மட்டுமே என் முயற்சி .
உலக தொலைக்கட்சிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்
"பாப்பா போட்ட தாழ்பாள்" என்ற படத்தில் சுவாமி நித்தியானந்தா தன் வசிகர சிரிப்பால் நம் உள்ளம் கவர்ந்து உள்ளார் . "ர" நடிகை ,அவர்கள் தன் நடிப்பு திறன் அனைத்தையும் அப்படியே தந்து உள்ளார் .
படத்தில் இருந்து சில காட்சிகள் .
நித்தி : பெண்ணே , அடி பெண்ணே
"ர" நடிகை : சுவாமி , எந்தன் சுவாமி .
நித்தி : உலக வாழ்க்கையில் எந்த பற்றுதலும் இருக்க கூடாது அன்பே .
"ர" நடிகை : சென்ற வாரம் , நீங்கள் "ப" நடிகையுடன் இருந்ததை பற்றி சொல்கிறீர்களா , சுவாமி .
நித்தி : க க க போ
"ர" நடிகை : தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .
நித்தி : சகியே , உனக்கு என்ன வேண்டும் ,கேள் .
"ர" நடிகை : நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .
நித்தி : த தா ஸ் து ...
நித்தி : நான் பெண்களுக்கு சம மரியாதை கொடுப்பவன் ,அதான்
"ர" நடிகை : அதான் தெரிகிறதே , சுவாமி .
நித்தி : புலன் அடக்கம் முக்கியம் பெண்ணே .
"ர" நடிகை : சுவாமி , விளக்கை அணைக்க வேண்டுமா ?
நித்தி : அதற்க்கு முன் , இமயமலையில் இருந்து கொண்டு வந்த அந்த மாத்திரை எங்கே கண்ணே ?
"ர" நடிகை : அது எதற்கு சுவாமி ?
நித்தி : அது குண்டலினி சக்தியை தூண்டி ,
"ர" நடிகை : அப்படி எனில் ,தங்களுக்கு 4 ,5 தேவை படும் என்று நினைக்கிறன் சுவாமி .
படத்தின் பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கிறது . அதுவும் அந்த " கட்டி புடி , கட்டி புடிடா " என்ற பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல மாற வாய்ப்புஇருக்கிறது .
இப்படி படம் முழுவதும் யதார்த்தம் குவிந்து கிடக்கிறது . குமுதத்தில் "கதவை மூடு , கேமரா வரட்டும்" என்ற தலைப்பில் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் குவிந்து கிடக்கின்றன . இப்படத்திற்கு டிக்கெட் கிடைப்பது சற்று கடினமே .
திருட்டு வி சி டி , டி வி டி போன்றவறில் மட்டும் இப்படத்தை பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் .
என்னையும் தொடர் பதிவு எழுத சொல்லி மேலும் பாவம் சேர்க்கும் மீன்துள்ளியானுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . சரி இப்படி சொல்லி தப்பிக்க முடியாது என்று தெரியும் . ஆனால் என்ன எழுதுவது ? என் பதின்ம வயது அனுபவத்தை தெரிந்துக் கொள்ள வேண்டியது உலகின் முக்கிய கடமை ஆதலால் தொடர்கிறேன் .
சினிமாக்களில் வருவானே கதாநாயகன் ,அவன் நமக்கு முக்கியம் இல்லை அவன் கூட சில அல்லகைகள் கடைசி வரை அல்லகைகலாக இருக்குமே அந்த வகை நான் . ஆனால் நான் கொஞ்சம் ஸ்பெஷல் . ஹீரோவிற்கு பாடத்தில் சந்தேகம் வந்தால் மட்டுமே உதவும் குணசித்திர வேஷம் எனக்கு .
பருவ கிளர்ச்சிகளுக்கு துளியும் இடம் தராமல் வாழ்ந்து வந்த வாழும் சரித்திரம் நான் . நம்புக்கப்பா . ஏனென்றால் எனக்கு சொல்லப்பட்ட , படித்துவுடன் கெடைக்கும் வேலைகள் மூன்று .
டாக்டர் , இஞ்சினியர் , பொட்டலம் போடும் மளிகை கடை தொழிலாளி .
எப்போதெல்லாம் 95% இருந்து 85% என்னுடைய மதிப்பெண் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்றாவது வேலைத்தான் கிடைக்கும் என்று தினமும் ,தின நொடியும் அர்ச்சிக்கப்பட்டது . மளிகை கடையில் வேலை பார்பவர்கள் எல்லாரும் 85% வாங்கியவர்கள் போல என்று நான் வருத்தப்பட்டது உண்டு .
பொதுவாக அந்த வயதில் , பாராட்டுக்காக முழு மனதும் அரிக்கும் . என்ன செய்வது ?, ஆசியர்கள் எல்லாரும் 1,2,3 இடங்களில் வரும் மாணவர்களை தான் பாராட்டுவார்கள் . ஆனால் என்னை போன்ற 7,8 வது இடங்களில் வருபவனை இந்த உலகம் தன் புறங்கையால் தள்ளித்தான் விடும் .
ஏதாவது கூட படிக்கும் பெண்களுடன் ஒரு வார்த்தை பேசினால் மனசு அப்படி அடித்துக்கொள்ளும் . ஆண்ட்ரோஜென் ,ஈஸ்ட்ரோஜென் கெமிஸ்ட்ரி என்று அமரர் சுஜாதா சொல்லியவாறு எல்லாம் தாறுமாறாக வேலை செய்தது .
என்ன பிரயோஜனம் , ம்கும் ..முக்கும் . விடுங்க பாஸ் .
இந்த பொண்ணுகளே இப்படித்தான் என்று புலம்பிவிட்டு நாட்டமையாக வலம் வந்து கொண்டு இருந்தேன் .
திட்டுகள் மட்டுமே பரிசாக கிடைத்த ஒரு நாளில் , பள்ளி ஆண்டு விழா . பக்கத்தில் இருக்கும் ஹீரோவிடம் நான் சொன்னேன் ,நானும் +2 வில் பரிசு வாங்குவேன் என்று .
போடா , போ , எந்த படத்துல இந்த காமெடி , சொல்லவே வில்லை என்று சிரிப்பு . உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனேன் .
தொடையை தட்டி பேச நான் ஒன்றும் ஹீரோ இல்லையே . கண்ணீரை கண்ணுக்குளே சிறை வைத்தேன் . அது வெளியேறியது +2 வில் நான் கலெக்டரிடம் தங்க மெடல் வாங்கும் போது தான் . பரிசு என்ற கானல் நீர் முதன் முதலில் என் கையில் விழுந்தது .
பள்ளி கூடத்து நட்பு என்பது பருவ பெண்ணை பார்ப்பது மாதிரி . எப்போதும் மகிழ்ச்சித்தான் , சிரிப்புதான் . கிளர்ச்சித்தான் . ஆனால் அது பின்னர் நிலைக்க முடியாமல் போவதற்கும் அதுவே காரணமாகிறது . இப்போதும் எங்கு பார்த்தாலும் பேசிக் கொள்கிறோம் ,ஆனால் மனதில் ஒரு மெல்லிய திரையோடு .
கல்லுரி கால வாழ்க்கை குணசித்திர வேசத்தில் இருந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக மாற்றியது .ஆனால் இன்னும் ஹீரோவாக முடியவில்லை . அரசியல் , அரசியல் அதை நான் கற்றுக்கொண்டது கல்லூரியில் தான் .
பொதுவாக கல்லூரியில் இரண்டு குருப்புத்தான் . ஒன்னு கடலை போடும் , இன்னொன்று கடலை போடாது .என்னென்றால் எங்களுக்கு தெரியாது , முடியாது .
நான் இரண்டாவது குருப் . ஒரு சின்ன ரவுடியாக வலம் வரும் ஆசை கொஞ்சம் நடந்தேறியது . உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளையும் ஒரு சேர நண்பர்களுக்குள் புன்னகையுடன் திட்டிக்கொள்வோம் . அவனை(நண்பனை ) நான் கேவலமா திட்டுவேன் , அவன் என்னை ரொம்ப கேவலமா திட்டுவான் . இதை ஒரு விளையாட்டாகவே நாங்க செய்வோம் .
சோதனை காலம் என்றால் அது Placement காலம் தான் . என்னுடைய ஆங்கில புலமையை பார்த்து , அருவி என கொட்டும் ஆங்கில அறிவை பார்த்து மிரண்டு எனக்கு ஒரு நிறுவனமும் வேலை தரவில்லை . இந்த தமிழ் மீடியம் படித்து வருத்தப்பட்டது அப்போதுதான் . மெதுவாக ,என் தன்னம்பிக்கை குறைய தொடங்கியது . முதல் 3 நிறுவனங்களில் நண்பர்கள் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட நான் மட்டும் தனி மரமானேன் . வாழ்க்கையை பார்த்து பயம் பழக தொடங்கினேன் . தொடர் முயற்சிகள் என்னை அயர்ச்சி அடைய மட்டுமே செய்தன . தீண்டாமையை எனக்குள்ளே நானே உருவாக்கி கொண்டேன் . ஒரு நாள் , அந்த நாள் மீண்டும் முயற்சி செய்து தோல்வியை சந்தித்தேன் .
அறையில் தனியே ,என் தலையணை மெதுவாக கண்ணீரால் நனைந்து கொண்டு இருந்த்தது . வாய் விட்டு அழ முடிய வில்லை .
நண்பன் ஒருவன் வந்தான் . கண்ணை மூடிய நிலையில் நான் .
"டேய் , நீ அழ வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் . நல்ல அழு . அழு .ஆனால் இது தான் நீ கடைசியா அழுவது என்று முடிவெடுத்து விட்டு அழு . "
கண்ணை திறந்து பார்த்தேன் . எதுவும் பேச வில்லை . அது தான் நான் கடைசியாக் அழுதது . அடுத்த சில நாட்களில் ,என் கைகளில் வேலை .
இன்றும் சோதனை வரும் போது ,அந்த வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன் .கல்லுரி கால நட்பு எனக்கு ஒரு வரபிரசாதம் ."மாப்ள , 20,000 அக்கௌண்டுக்கு அனுப்பிடு " , என்று சொன்னால் அடுத்த 5 வது நிமிடம் பணம் வந்து விடும் . இப்படி ஒரு நம்பிக்கையை என்னை பற்றி மற்றவர்களிடம் ஏற்படுத்தியது கல்லுரி . ஆரம்பிக்க தெரிந்த எனக்கு முடிக்க தெரியவில்லை . முடிவில்லா வானம் போல் ,நட்பும் தொடரட்டும் .
என்னை வம்புக்கு இழுத்த மாதிரி , நானும் இரண்டு பேரை கூவிக் கொள்கிறேன் .
புவன் (சுட்டப்பழம் )
குந்தவை
மேற்ப்படி பெரிய எழுத்தாளர்கள் ,நான் சொன்ன படி "பதின்மம் " பற்றி தொடர் பதிவு எழுத வில்லை என்றால் , கடுமையான் பின் விளைவுகள் வரும் என்று இப்போதே கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் .
ரஜினி , அஜித் ரசிகர்கள் வேறு தளத்திற்கு சென்று விடவும் . உங்களுக்கு புரியாத , தெரியாத செய்திகளை நான் இங்கு சொல்ல வில்லை .மற்றவர்கள் வழக்கம் போல வேறு எங்கும் போகாமல் மேலே படிங்க .
திரும்பவும் ரஜினி சீசன் . இப்போது சீண்டி இருப்பது ஜாகுவார் தங்கம் , குகநாதன் போன்ற பழம் பெரும் மேதைகள் .ரஜினி யை ஜோக்கர் என்றும் , அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி உள்ளனர் . அவர்கள் இதை ஏன் சொல்கிறார்கள் ?
இதை வைத்து ஒன்று, அரசிடம் ஏதாவது வேலை ஆக வேண்டும் ,அப்படி இல்லை என்றால் கேவலமான புகழ் பெற வேண்டும் .ஆனால் இதை தாண்டி ஒரு அரசியல் இதில் உள்ளது . அது என்ன ? சொல்கிறேன் பின்னர் .
ரஜினி , அஜித் வேண்டாம் என்றால் விழாக்களுக்கு அவர்களை கூப்பிடாமல் தானே இருக்க வேண்டும் . எந்த போராட்டம் என்றாலும் ரஜினி வேண்டும் , அந்த புகழில் இவர்கள் குளிர் காய வேண்டும் .
பொதுவாக ரஜினி பற்றி பல எதிர் மறை கருத்துகள் உள்ளன .அதில் சில வற்றில் நான் உடன் படுவேன் .ஆனால் எல்லாவற்றுக்கும் இல்லை .
காவேரி பிரச்சனை என்றால் , தமிழ் நாட்டில் ரஜினியை கன்னடக்காரன் என்பார்கள் . அவர் ஏதாவது போராட்டத்தில் பங்கு எடுத்த்விட்டால் ,இவன் தமிழ் நாட்டுக்காரன் என்று கர்நாடகத்தில் சொல்லுவர் . இல்லை என்றால் ரஜினி ஒரு மராட்டிக்காரன் என்று தூற்றுவர் .
இதற்க்கு எல்லாம் என்ன காரணம் தெரியுமா ? நம்முடைய கீழான புத்திதான் . நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரஜினியை உயர்த்தி பிடிப்போம் . இல்லை என்றால் மிதிப்போம் . வேறு எந்த மாநிலத்திற்கு நாம் சென்றாலும் , நாம் பெருமை பட ஒரு நிகழ்வாவது ரஜினியால் நடந்து விடுதிகிறது . அமிதாப் Vs ரஜினி என்று சொல்லும் போது , ரஜினி எங்க ஆளு என்று நாம் சொல்கிறோம் .
பல வெளி நாடுகளில் ரஜினியால்தான் , தமிழ் படங்களுக்கு சிறிது வெளிச்சம் உண்டானது என்பதை திரைத்துறையினர் மறைக்க முடியாது .
விடுதலை போராட்டத்தில் முதலில் கிளர்ந்து எழுந்தவன் தமிழன் , அவன் பெயர் கட்டபொம்மன் என்று மாரு தட்டுகிறோம் . ஆனால் கட்டபொம்மனோ தெலுங்கு மொழி வாழ் வந்தவன் என்பது வரலாறை படிப்பவர்களுக்கு தெரியும் . நமக்கு தெரிந்தாலும் , இல்லை அவன் தமிழ் நாட்டில் பிறந்தான் , வளர்ந்தான் , தமிழ் நாட்டிற்க்காக உழைத்தான் என்று சொல்லி பெருமையை தக்க வைக்க மட்டுமே பார்க்கிறோம் .இங்கே அவன் நதி மூலம் , ரிஷி மூலம் தேவை இல்லை . நமக்காக உழைத்தானா என்று கேள்விக்கேட்டு அவனை நாம் தமிழனாக ஏற்றுக்கொண்டோம் .
இன்று திராவிடர்கள் என்று பழம் பெருமை பேசும் நாம் , உ.வெ.சா என்ற ஒரு ஆரிய ஐயர் இல்லை என்றால் தமிழில் பல இலக்கியங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும் . அதானால் அவரை தமிழ் தாத்தா என்று கூப்பிட்டு மகிழ்கிறோம் .
இப்படி உற்று நோக்கினால் ,தேவை படும் போது மட்டும் சிலரை உயர்த்தி , தேவை இல்லாத நேரத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் கிழே போட்டு விடுவோம் .
ரஜினியை ஒரு பெரிய புனிதனாக நான் நினைக்க வில்லை . ஆனால் ஒரு நல்ல மனிதன் அவர்க்குள்ளாக எப்போதும் நிறம் மாறாமல் இருக்கிறான் .
ரஜினியின் பேச்சுகளில் உண்மை மிக எளிமையாக இருக்கும் . மேடை மிகை பேச்சு அவர் பேச்சுகளில் இருக்காது . எதுகை மோனை இருக்காது .மனதில் தோன்றியதை சொல்லிவிடுவது அவர் இயல்பாக இருக்கிறது .
ஆனால் அதற்காக யாருக்காவது ஏதேனும் துன்பம் என்றால் தன் புகழை ,மரியாதை குறைத்து கீழ் இறங்கி வருவதும் வாடிக்கை . ரஜினியால் கெட்டவர்கள் எவரும் இல்லை என்பது அவர்களின் எதிரிகளுக்கும் தெரியும் .
இதை போன்று அஜித் இப்போது பேசி வருவதும் ,அவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்கிறான் என்பதை காட்டுகிறது .
சரி , ரஜினியை , அஜித்தை திட்டுபவர்கள் பின்னால் ஒரு அரசியல் என்று சொன்னேன் இல்லையா ? அதாவது ரஜினி ,கமல் , அஜித் ,விஜய் போன்ற பெரிய தலைகளின் வருகையை வைத்துதான் பெரிய மக்கள் கூட்டத்தை அவர்கள் கூட்டுகிறார்கள் . டிக்கெட் எல்லாம் கொடுத்து பெரிய விலை பார்கிறார்கள் . பெரிய நிறுவனங்களிடம் இந்த கூட்டத்தை காண்பித்து விளம்பரம் மூலம் பெரிய நிதி அன்பளிப்பு பெறுகிறார்கள் .பின் அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்ச்சிக்கு அதை விற்று மேலும் ஒரு பெரும் பணம் பார்கிறார்கள் . இப்படி எல்லாம் பணம் வரும் வழியை ரஜினி ,அஜித் அடைத்தால் என்ன செய்வது ?
இங்கே கருப்பு பணம் புகுந்து விளையாடுகிறது . புகழ் கிடைகிறது . அரசியல் வாதிகளின் பழக்கம் , அதன் மூலம் வரும் வருவாய் ..எல்லா வற்றையும் திடீர் என அவர்கள் இழக்க முடியவில்லை .அதான் இப்படி கத்திக் கொண்டு இருக்கிறார்கள் .
எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள் என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?
இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ? என்று கேள்வி வந்து விழுந்தது .
Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை, மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா என்று அடுத்த கேள்வி .
ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .
ரெண்டும் சேர்ந்து ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .
கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும் சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .
காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .
ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .
கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன் இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .
கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று கேவலமான கேள்வி .
பதில் தெரியாததால் நான் இது வரை காதலிக்க வில்லை .
போதுமா , போதுமா ..
இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன சொல்றா ?
அப்படின்னு கேட்டீங்க ...!!!@@#$$$
ஏன்டா இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில் நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..
டிஸ்கி : இப்போதைக்கு விஸ்க்கி ,
அப்புறம் உங்களை மீட் பண்றேன் .
இயலாமையின் வெளிபாடு கோபம் . அதனை தனிப்பதர்ககாக நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணாச்சி டீ கடை .
அந்த கசங்கிய நாளிதழ்கள் , சுட சுட வடை ,அந்த பக்கம் இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் இது எல்லாம் தேவைபடுகிறது ஒண்ணுக்கும் உதாவத இந்த கோவத்திற்கு .
அன்றும் மற்றொரு நாளே . வழக்கம் போல டீ கடை நோக்கி என் கோப பயணம் சென்றது .
மிக பரிதாபமாக ஒரு ஜீவன் , இல்லை ,இல்லை ஒரு " நாய்" ஜீவன் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது . நாங்க எல்லாம் யாரு ? அப்படியே முறைச்சிகிட்டே பின்னாடி நடந்து அண்ணாச்சி கடைகிட்டே வந்து சேர்ந்தேன் .
அப்பவும் அந்த நாய் என்னையே முறைசிகிட்டே இருந்தது . என்னது தொப்புளை சுத்தி 16 ஊசியா ? என் உள் மனம் கேள்வி கேட்க துவங்கியது .
அப்போது தான், ஒரு 5 அல்லது 6 நாய் குட்டிகள் அதன் அம்மாவை சூழ்ந்து கொண்டன . ஆனால், அந்த நாய் , அந்த குட்டிகளை தள்ளி விட்டு என்னை நோக்கி மெதுவாக வரத் துவங்கியது .
திடிரென நின்றது . குட்டிகள் பால் குடிக்க துவங்கின . ஆனால், அந்த நாய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோட இருக்கும் என்பது போல ரொம்ப பலவீனமாக இருந்தது .
மீண்டும் அந்த நாய் , என்னை நோக்கி வரத் துவங்கியது . அப்போதுதான் கவனித்தேன் ஒன்றை . அதன் அமுத சுரபியில் இருந்து ரத்தம் வடிந்தது கொண்டு இருந்தது .ஏனோ "ஆயரத்தில் ஒருவன் " படம் மனதில் வந்து போனது .
நான் ஒரு பன்னை வாங்கி அதற்க்கு வைத்தேன் , ரொம்ப பசி போல . லபக் லபக் . முடிந்தது எல்லாம் . எனக்கு ஒரு நன்றி பார்வை பரிசளித்தது .
டீ கடை அண்ணாச்சிக்கு உடனே ரொம்ப கோபம் ,
" இந்த சனியன் திரும்பவம் வந்துடுச்சா !!!???..
டேய் அந்த கட்டையை எடுடா .."
எனக்கு இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது .
சரியாக தூக்கி எறியப்பட்ட அந்த கட்டை அந்த நாயின் தலை மற்றும் அதன் ஒரு குட்டியின் காலையும் பதம் பார்த்தது . கண்டிப்பாக ரத்தம் வந்து இருக்கும் .
அந்த நாய் , அடி வாங்கிய அந்த குட்டியை நக்கி கொண்டே நகர்ந்து சென்றது .
நான் திரும்பிக் கொண்டேன் .
ஈன சுரத்தில் அது கத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தது . எதோ ஜென்ம பந்தம் போல , என்னால் டீ குடிக்க முடியவில்லை .
இன்னும் ரெண்டு பன் வாங்கினேன் . கால்கள் நடக்க துவங்கின அந்த நாயை நோக்கி . மன்னிக்கவும் அந்த தாயை நோக்கி .
ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ? புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.
விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.
என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ?
வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .
என்னடி பத்தினி வே ஷம் போடுற , முதல் ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!
கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .
என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் .
அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும் வந்தான் .
டேய் ரகு , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க
உடனே ரகு , தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப கொடுத்து வைததவன்டா.
நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?
நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா என்று அவள் அப்பாவியாக கேட்க .
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .
பின் அவள் கணவனிடம் , விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது என்று பாராட்டினான் .
ரகு போன பிறகு ,
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .
ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?
அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?
என்னடி இவனும் முன்னாள் காதலனா ?
இன்னும் எத்தனை பேருடி?
சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .
அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,
தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு போய்டு தாயி .
நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .
நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?
நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே
விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?
கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது .
அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .
எங்கங்க அவன் இல்லையா ?
இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..
அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .
உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????
சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை .
இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல
நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .
ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக .
இப்ப உன்னால் என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,
உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?
பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .
இரகுவே மீண்டும் ,
கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .
நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .
இன்னும் நெருக்கமாக
இன்னும் ..
திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .
என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?
கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .
பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .
என் கூட வாம்மா , தாயி , இனி நீ என் மகள் .
அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .
அடுத்த நாள் தினமலரில்
22 வயது பெண் 55 வயது வாலிபருடன் தப்பி ஓட்டம்
- மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .
- வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .
- கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .
தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் " சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?

என்னடா , இவன் கவிதை எழுதி மொக்கை போடப் போறான்னு தப்பா நினைக்காம மேலும் படிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
சிரிக்கும் மிருகம் பெண் என்று அந்த ஆட்டோவின் பின் புறம் எழுதி இருந்தது .
இந்த பதிவை படித்தவுடன் , என்டா , இதைப் போய் படித்தோம் என்று கண்டிப்பாக நினைக்க போகிறீர்கள் .
ஜாக்கிரதை .நான் என்னை சொல்லி கிட்டேன் .
என்னை , நான் ஒரு முற்போக்குவாதி , பிற்போக்கு வாதி , நடு போக்கு வாதி என்று சொல்லிக்கொள்ள மாட்டேன் .இருந்தாலும் இந்த புத்தாண்டை பற்றிய சில ஐயப்பாடுகள் எனக்குள்ளன .
2010 இது எதைக் குறிக்கிறது? . இயசு பிறந்து 2010ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதைத்தான் . ஆனால் அறிவியல், அப்படி ஒருத்தர் , இருந்தாரா இல்லை அந்த ஆண்டுத்தான் , அந்த கிழமைத்தான் பிறந்தாரா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை .பின் எப்படி அதை உண்மை எனவோ , அதன் அடிப்படையில் அமைந்த இந்த தினத்தை புத்தாண்டு என்று கொண்டாடுவது ?
இயசு பிறப்பதற்கு முன் (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் ) 10 மாதங்கள் தான் இருந்தன . ஒவ்வொரு அரசனின் ஆட்சியிலும் சில நாட்கள் , மாதங்கள் கூட்டப்பட்டன .
நீங்கள் கேட்கலாம், தமிழ் புத்தாண்டு என்று கூட உள்ளது என்று ?
தமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது ?
தமிழ் வருடங்கள் 60 என்கிறார்கள் . அதில் ஒன்று கூட தூய தமிழில் இல்லை . அது இந்து மதத்தின் திணிப்பு .
நமது தமிழ் இலக்கியத்தில் எல்லாம் புத்தாண்டு என்றோ , புத்தாண்டு கொண்டாட்டம் என்றோ எந்த செய்தியும் இல்லை . அப்படி இருந்திரந்தால் தை 1 தமிழ் புத்தாண்டாக மாறி , பின் மீண்டும் சித்திரை 1 ௧ மாறி இருக்காது .
ஆக தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வில்லை . அது நாம், மற்ற நாட்டினரை பார்த்து காப்பி அடித்தது (வழக்கம் போல ).
நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது . அது அறிவியலுக்கு , அறிவுக்கு ஒவ்வாதது என்றாலும் ஒரு காரணம் உள்ளது . அது உழைப்பாக(பொங்கல் ) , இறப்பாக(தீபாவளி ) , பிறப்பாக (கிறிஸ்மஸ் ) என ஒன்றாவது உள்ளது .
ஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் என்ன உள்ளது .?
இப்படி எல்லாம் மூளை யோசித்தாலும் , என் மனம் வேறு ஒன்றை சொல்கிறது ? மூளை ஏன் கொண்டாடுகிறாய் என்று கேட்கிறது . மனம் ஏன் கொண்டாடகூடாது என்று கேட்கிறது .
வாழ்வில் இந்த மாதிரி சில கொண்டடட்டங்கள் தான் ஒரு பிடிப்பை ஏற்படத்துகின்றன . இதை கொண்டாடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் ?
ஒன்னும் இல்லை . ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .
நாம் தினமும் கவலை பட ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .
மதத்தை , மொழியை , இனத்தை ,தேசத்தை கடந்து இந்த புத்தாண்டை கொண்டாடுவோம் ..இனிவரும் நாட்கள் இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ..
என்ன சொல்ல வரேன் என்றால் ..
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .
டிஸ்கி : இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எனக்கு யாரும் டீரீட் வைக்க வில்லை என்ற கோவத்தில் எழுதியது .. மூளைக்கு வேலை கொடுக்காதீங்க .அது எந்த வேலையையும் நம்மள பண்ண விடாது .