(விவகாரம் உள்ள இருக்கும் , பரவா இல்லையா )
வால்பையன்: சரக்கடிக்காதே
மந்திரன் :அடுத்த நிமிடம் , நீங்க சாக போறீங்க .. என்ன பண்ணுவீங்க ?
வால்பையன்: குஷ்பூ- ஆண்டி
எதுக்கு வம்பு ..உங்களை நெக்ஸ்ட் மீட் பண்றேன் ..
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
வக்கிரம் யாருக்கு ? என்று கேட்டால் , இப்போதைக்கு செக்ஸ் அர்ச்சகர் "தேவநாதன் " என்று நச்சுன்னு பதில் வரும் ..
விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கறது என்ன சுகம் ! என்ன சுகம் என்று வடிவேலு முனகும் போது ,
"தலை, விஜய் வந்து இருக்கிறார் " என்று பூச்சியப்பன் சொல்ல .. டரியலாகிறார் வடிவேலு.
இந்த விஜெய்க்கு, கட்டம் சரியில்லை . சரி வரச் சொல்லு
ங்ணா , எப்புடிங்க்னா இருக்கீங்க ? என்று விஜய் பல் இளிக்க,
இதுவரை நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு ..இப்பதானே நீ வந்து இருக்க , என்ன விஷயம் கண்ணா ?
நம்ம படம் பட்டை கிளபுதுங்க ங்ணா,நீங்க வந்து பார்க்கணும் ங்ணா.
என்னடா இவன் , ஓவரா பம்முறான் , பின்னாடி ரொம்ப ஆட்டுறான் என்று வடிவேலு நினைத்துக் கொண்டே ,
ஏய் , என்னை வச்ச்சு காமெடி கீமடி பன்னைலையே ?
ங்ணா , நான் ஒரு தடவை கமிட்ட ஆயட்டேன்ணா , என் பேச்சை நானே கேட்க்க மாட்டேன்னா ங்ணா..
கொய்யால , உன் பேச்சை நீயா கேட்கலைன்னா வேற எந்த நாய் கேட்க போறாங்க .. இப்பவே கண்ணை கட்டுதே .. ஆமாம் , ஏன் இப்ப இதை சொன்ன ?
படம் பார்க்க வாங்க ..
என்ன , இவ்வளவு பாசமா கூப்பிடுறான் ..போய்த்தான் பார்ப்போமே ..
தியட்டேர் முன் ஒரு பெருங் கூட்டம் ..
அட , படம் நல்ல இருக்கும் போல , கூட்டம் களை கட்டுதே , நாமத்தான் தப்பா பேசிட்டோமோ..
பாஸ், நான் மோசம் போய்ட்டோம் ..என்றான் பூச்சி . என்னடா சொல்ற ? அது படம் பார்க்க வந்த கூட்டம் இல்லை . படம் பார்க்க வேண்டாம் அப்படின்னு சொல்ல வந்த கூட்டம்மாம் ...
என்னடா சொல்ற , பீதியில நான் ஒன்னுக்கு போய்ட போறேன் ..அம் ... சரி விடுடா .
.என்னை ரொம்ப நல்லவன் நினைத்து படம் பார்க்க சொல்லி இருக்காங்க.. என்னத்தான் அதுல இருக்கன்னு பார்ப்போமே ..
3 மணி நேரம் கழித்து ..
எனக்கு இது மெயிலில் வந்தது .. தமிழ் "சப் டைட்டில்" போட்டது மட்டும் நம்ம முயற்சி ...
இதை தான் நாங்க "RUN" படத்திலே பார்த்துப் புட்டோம் ..
வேட்டையாடு விளையாடு படம் உங்களுக்கு ஞாபகம் வந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல .
பங்குனி வெயில் பல்லை காட்டிகிட்டு அடிக்குது . இதுல ஜெர்கின் வேற .. உள்ள ஜீன்ஸ் சட்டை வேற ..
வயசுக்கு வந்த புள்ளைக்கு, துணைக்கு வர மாதிரி சுத்தியும் சொந்த காரங்க போல ..
பகவதி ரீமேக் .. பூமி தாங்காது சாமி .
பாட்சாவின் ஒரிஜினல் காப்பி .. அந்த மஞ்சள் கைக்குட்டையை கூட விடவில்லை ..
சாமி , தர்மம் பண்ணுங்கம்மா ...
ஒடுங்க! அது ரொம்ப கோவமா இருக்கு .. அந்த கொடிய மிருகம் நம்மை நோக்கி வருது ..
டிஸ்கி : இது விஜய் ரசிகர்களை குசி படுத்த என்று சொன்னால் நீங்கள் நம்பவா போறீங்க ?
"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்லை பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிகிலாமா "
பாட மட்டும் தான் இது எளிது . ஆனால் நடைமுறையில் விழி பிதுங்கி போகுது எனக்கு ..என்னடா ஆரம்பமே ஒரே அழுகாச்சியாய் இருக்குன்னு நினைக்காதீங்க ..
நிலைமை அப்படி .. நான் ஹரி , எனக்கு பெண் பார்க்க நாளை கிளம்ப வேண்டும் என்பது உத்தரவு .
அட நமக்கு கூட பெண் கொடுக்க ஒரு குடும்பம் இருக்குன்னு நினைக்க , நினைக்க ஒரே மஜாதான் .
ஆனால் அந்த பெண்ணின் , அதாங்க என் வருங்கால மனைவி (கொஞ்சம் இருங்க வெட்கப்பட்டு கிறேன் ..)
புகைபடத்தை கையில் கொடுத்தாங்க பாருங்க ..அதுக்கு அப்புறம் தான் நமக்கு சந்தேகம் .
அதை தீர்க்கத்தான் , நான் ஒரு மந்திர ஆலோசனை நடத்த அருணையும் , பிரபுவையும் கூப்பிட்டு இருக்கிறேன் .
அதோ , அவிங்க வந்துட்டாங்க ..
"டேய் ,ஹரி , எல்லாம் கேள்விபட்டேன் , ரொம்ப கஷ்ட்டமா போச்சு, அந்த பெண்ணை நினைத்து.. " ஆரம்பத்திலே அதகளம் பண்ணினான் அருண் .
"டேய் , அந்த பெண்ணுக்கு பாரத ரத்னா விருது ஒன்னு கொடுக்கலாம் என்று பிரதமர் சொன்னதாக ஒரு வதந்தி " இப்படி ஒரு பிட்டு பிரபுவிடம் இருந்து .
" அடங்குடா , இந்த புகை படத்தை ஒரு நிமிடம் பாருங்குடா " - இது நான் .
"இல்லை ... "வ்வர்ர் , வார் ,, வார்த்தையே வர வில்லை டா"
ரெண்டு பேரும் கொஞ்சம் இல்ல , ரொம்ப குழம்பி போய்ட்டாங்க ..
என் வாயால , அப்படி சொல்ல கூடாது ..இருந்ததாலும் உங்களுக்காக ஒரு தடவை மட்டும் , ஒரே தடவை மட்டும் .. "சூப்பர் , சூப்பர் பிகரு " .
எங்க ரெண்டு பேருக்கு என்ன பொருத்தம் இருக்குன்னு ஆண்டவன் இப்படி கூட்டணி வச்சிட்டான்னு தெரியல ..
"டேய் , ஹரி நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா ..இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன் .. " என்றான் அருண் .
"சரிடா , உனக்கு என்னடா இப்ப பிரச்சினை " என்று கேள்வி கேட்டான் பிரபு
. "இல்லைடா , அந்த வித்யா , அதான் நான் கல்யாண பண்ணிக்க போகிற பெண் , ரொம்ப , ரொம்ப அழகா இருக்கா ..ஆனால் என்னை போய் கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதித்து இருப்பாள்?"
"யோசிக்க வேண்டிய விஷயம்" என்று சிரித்தான் அருண் .
"விடுடா , நாளைக்கு நேருக்கு நேரா நீயே கேட்டு விடு " என்றான் பிரபு .
"அதான் சரி , ஆனால் நாங்க அங்க வரவில்லை .." என்று மிரட்டினான் அருண் .
"ஏன்டா , ஏன்டா " இது நான் மிரட்ச்சியுடன் .
"நீ அங்கு போய் , வித்யாவை பார்த்து ரொமான்ஸ் பார்வை எல்லாம் பார்ப்பாய் ..எங்களுக்கு இருக்கிறதோ சின்ன இதயம் , இதை எல்லாம் தாங்க முடியாது " என்று இரண்டு பேரும் நழுவினார்கள் .
ச்சே , இவ்வளவு வேகமாகவா காலம் ஓடும் . நான் இப்போது வித்யாவின் வீட்டில் , பெண் பார்க்கும் படலத்தின் தற்போதைய கதாநாயகன் .
குறு குறுன்னு எல்லாரும் என்னையே ஒரு மாதிரி பார்க்குறாங்க .. கொஞ்சம் , என்னோட ஆளை , கண்ணுல காட்டுன நல்லா இருக்கும் ..
எங்கே கட்டுறாங்க ..? பெருசுங்க எல்லாம் எதோ , எதோ பேசுறாங்க .நமக்கு தான் கண்ணை கட்டுது ...
அதோ , அதோ அவள் வருகிறாள் . தரை மேல் அவள் நடந்து வரவில்லை . தரையே அவளை தாங்கி வருவது போல் ஒரு நினைப்பு .
என் உயிர் கூட சரியான விலையாகது அவள் அழகுக்கு .
பிரம்மன் புத்திசாலி , நான் அதிர்ஷ்டசாலி ..
அவளிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னவுடன் "நாட்டாமை " மாதிரி ஒரு பார்வை என் வருங்கால மாமனாரிடம் இருந்து
. சில ,பல கெஞ்சலுக்கு பிறகு , இப்போது நான் வித்யாவுடன் தனி அறையில் . நேருக்கு நேர் அவளை பார்க்க கூட முடியவில்லை .
என் நிலை உணர்ந்தே , அவள் சிரிக்க துவங்கினாள். ஆம்பிள்ளை ஆச்சே , விட்டு விட முடியுமா ? துணிந்தேன் .
பின் நான் ,
" என்னை , உண்மைலேயே உனக்கு பிடிச்சு இருக்கா ?"
" ஏன் , இப்படி? " என்று அவள் வாய் கேட்கவில்லை , அவள் கண் கேட்டது .
பின் அவளே , "என்னோட புருஷன் , அழகா மட்டும் இருக்கனும் நான் நினைக்கல . நல்லவராகவும் இருக்கணும்... "
"நான் , நல்லவன் ...அழகா ?...." என்று நான் தடுமாறிய போது,
. அவள் ,
" போன மாதம் ,பஸ் ஸ்டாண்டில் , உங்களிடம் தன்னை விலை பேச வந்த ஒரு பெண்ணிடம் என்ன கூறினீர்கள் ?"
"அது , அது .... அவளிடம் 500 ருபாய் கொடுத்து ,அவளை பக்கத்தில் கட்டிட வேலை பார்க்கும் இடத்த்தில் ஒரு மணி நேரம் நிற்க சொன்னேன் "
"எதற்கு அப்படி சொன்னீர்கள் ?"
" அங்கு , இளம் பெண்கள் , வயதான பெண்கள் , சின்ன பெண் குழந்தைகள் எல்லாரும் வேலை செய்வார்கள் .. அதை பார்த்தாவது சில மணி நேரம் தன்னை திருத்திக் கொண்டால் நல்லது என நினைத்தேன் ...
ஆனால் அப்பொழுது நீ பக்கத்தில் இல்லையே ..பின் எப்படி ..?"
நீங்கள் சொல்வது சரி , அந்த பெண் , அங்கு வேலை செய்த ஒரு நொண்டி பெண்ணை பார்த்து மனம் திருந்தி , எங்களிடம் வேலை கேட்டு வந்தாள்.
அவள் தான் எங்கள் அலுவலகத்தை இப்போது சுத்தம் செய்பவள் .உங்களோட போட்டாவை நான் பார்த்து கொண்டு இருக்கும் போது தான் , அவள் இதை கூறினாள்...
அவளின் கண்ணீரில் நான் உங்களை பார்த்தேன் .." என முடித்தாள் வித்யா.
பின் என்னை பார்த்து "உங்களை விட அழகான ஒரு ஆணை இது வரை நான் பார்த்தது இல்லை " என் கன்னத்தை கிள்ளி விட்டு சென்றாள்.
அங்கு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நான் . கண்ணாடியில் ஹரி .
இருவரும் கேட்டுகொண்டோம்
" நீ அவ்வளவு நல்லவனா ?"
நிஜம் தான் , நான் சொல்ல போவது எல்லாம் நிஜம் ..
1. 1978 -ல், கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள் வெளியானது . ஒரு வருடம் கழித்து சைகோ ராமன் என்பவன் தமிழகத்தையே அதிரவைத்தான் தன் மன்மத கொலைகளால் .
2. 1988 -ல், கமலின் நடிப்பில் "சத்யா " வெளியானது . 1990- ல் நாடு மாபெரும் வேலை இல்லா திண்டாட்டத்தை பார்த்தது .
3.1992 ல் தேவர் மகன் வெளியானது . சரியாய் 1993- ல் நடைப்பெற்ற சாதி கலவரங்கள் தான் இன்றும் சாதி என்னும் தீயை அணையவிடாமல் தென் மாவட்டங்களில் காக்கிறது .
4.1994 , மகாநதி படத்தில் , பணத்தையும் , குடும்பத்தையும் இழந்தார் கமல் . 1996ல் தமிழகத்தில் புகழ் பெற்ற சிட் பான்ட் நிறுவங்கள் வரிசையாக மக்களுக்கு நாமம் போட்டனர் .
5. 1992 -ல், இந்து முஸ்லிம் சண்டையை "ஹே ராம் " படத்தில் வைத்தார் கமல் .2002- ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் , அதன் பின் நடந்த முஸ்லிம் இன படுகொலைகளையும் நான் என் வாயல சொல்ல மாட்டேன் . 6.2003 -ல் ,"சுனாமி" என்று அன்பே சிவத்தில் சொன்னாலும் சொன்னார் , 2004- ல் நடந்த சுனாமியின் கோரதாண்டவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை .
7. இது லேட்டஸ்ட் . தசாவதாரத்தில் (2008) ஒரு கொடுமையான , பயங்கரமான வைரஸ் பற்றி சொல்லி இருப்பார் .நாம் இப்போது "Swine Flu " பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறோம் ..
ஆமாம் , இது எல்லாம் தற்செயல்லா ? இல்லை வேற எதாவது ....... சொல்ல விருப்பம் உள்ளவர்கள் பின்னுட்டத்தில் சொல்லலாம் ..
டிஸ்கி : இது என் நண்பனின் வாய் மொழி வாயிலாக கேட்டது . இதை போன்று ஏற்கனவே எ-மெயில் (ஆங்கிலத்தில் ) வந்ததாக சிலர் கூறுகின்றனர் . ஆனந்த விகடனில் வந்ததாக "வால்" சொல்கிறார் . இரண்டும் உண்மையாக இருப்பின் , என்னை மன்னிக்கவும் .. (என் நண்பனை ,போய் உதைக்கணும் .....)
என்ன ஒரு வேகம் .
கொஞ்சம் பொறுமையாக படியுங்க .
நான் "8+" என்றுதான் போட்டுள்ளேன் .."18+" அல்ல .
அதனால இந்த பதிவை எல்லாரும் படிக்கலாம் (டேய் , நீ எங்கடா இருக்க #$$%%% )..
ரொம்ப சின்ன விஷயம் தான் .
ஒவ்வொரு தடவை பண்ணும்போதும் ரொம்ப இனிமையாக இருக்குது .
அடச் ச்சே ..என்ன வேற மாதிரி , பதிவு போகுது .
நேர விசயத்துக்கு வரேன் . இந்த வாரம் , முடி வெட்டிகொள்வதர்க்காக சலூனுக்கு போனேன் . அட .அட .. முடிக்கு கூட வலிக்காம , என்னமாய் வெட்டுறாங்க ..
ஒவ்வொரு தடவை இந்தமாதிரி பீல் பண்ணி கிட்டு இருக்கும் போதே ,
ஒரு சின்ன தூக்கம் கண்ணை கட்டும் பாருங்க .. ஆஹா ...ஆஹா ...
அது என்னவோ நல்லத்தான் இருக்கு (ஏய் ,என்னமா பீல் பண்ணி கூவுற ..)
என்ன மாதிரி நீங்க யாராவது பீல் பண்ணி இருக்கீங்களா .?.
பொண்ணுங்க எல்லாம் பாவம் , இந்த விசயத்தை பொறுத்தவரை (என்ன ஒரு ஆணாதிக்கம் ??? !!!!) ..
ஒவ்வொரு தடவை முடிவெட்டிக்கொள்ள போகும் போதும் ஒவ்வொரு அனுபவம் (கொஞ்சம் அடங்குடா ..) அந்த தண்ணியை தலையில கொஞ்சம் அப்படி , அப்புறம் இப்படி அடிக்கும் போது ஜிலு ஜிலுன்னு ஒரு A.C பீலிங் .
அப்புறம் எல்லாம் முடிந்தபின்னாடி , ஆயில் மசாஜ் கொஞ்சம் பண்ணுவாங்க பாருங்க .. அப்படியே போய், வீட்டுல சுடுத்தண்ணியில ஒரு முக்கு ... அவ்வளோதான் .. அவ்வளோதான் ..
கட்டையை சாய்த்து, விட்டத்தை பார்த்து தூங்குனா என்ன ஒரு சுகம் ..
இது எல்லாம் ஒரு மேட்டர், அப்படின்னு பதிவு போடனும்மான்னு ஒரு தயக்கம் .
ஆனால் ஒரு மயக்கத்துல பதிவை போட்டுட்டேன் .(என்ன , T.R வாசம் வீசுது ..?!!)
அழகில் நான் சினேகாவுக்கு போட்டி .இதை நான் சொல்ல வில்லை .என் தோழிகள் எல்லாரும் சொல்லுவார்கள்
அப்புறம், இந்த ஆம்புள பசங்க ரொம்ப மோசம் .
அப்பாடி!! என்ன பார்வை பாக்குறாங்க ?
எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருக்கு . ஹரி என்னை பெண் கேட்டு வரும் வரை , என் வீட்டு முன்னால் எப்போதும் பசங்க இருப்பாங்க .
காதலை நான் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்து இருக்கிறேன் .
ஆனால் இந்த ஹரி , தினமும் I LOVE U என்று 100 முறை சொல்லி விடுகிறான் . இதுவும் எனக்கு பிடித்து இருக்கிறது .பெண்ணாக பிறந்ததால் எவ்வளோ சந்தோசம் .
இந்த உலகம் பெண்களை சுற்றிதான் உள்ளது என்பது உண்மை தான் . வில்லன்களே இல்லாத சினிமாதான் என் வாழ்கை .
கொஞ்சி குலாவும் கணவன் ,திகட்டாத மாமியாரின் அன்பு இப்படி சொல்லி கிட்டே போகலாம் .இப்ப நினைத்தாலும் உடம்பு எல்லாம் கூசிகிறது அந்த முதல் இரவை நினைக்கையில் .
புது ஆண் , தனி இரவு ,படுக்கை அலங்காரங்கள் . எதுவுமே மறக்க முடியவில்லை .
போன மாதம் வரை நான் , நான் மட்டுமே . இன்று நான், இன்னொருவரின் மனைவி . காலத்தின் கோலங்கள் எவ்வளவு சுகமானவை .
இரண்டு மாதங்கள் என்னை தின்ன துவங்கின .
எனக்கான உலகம் என்னை வெளியே துரத்தியது ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் . செய்தி சிறியதுதான் . ஹரிக்கு எமனாக வந்தது ஒரு நாய்
. "சென்னையில் நாயை காப்பாற்ற எண்ணி விபத்தில் இறந்த வாலிபர் " என்று மாலை முரசு முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் என்னவர் பெயர் .
யாருக்கும் தெரிய போவதில்லை பின்னால் இருக்கும் என் எதிர்காலம் .
கூட்டம் கூடி எனக்கு பட்டம் கொடுக்க துவங்கினர்.
மொட்டச்சி ,
ரெண்டு மாசத்துல புருசனையே முளுங்கியவ .
என்னா ,மினுக்கு மினுக்கினா....
அவர் அவர்களுக்கு பிடித்தமாதிரி கெட்ட தமிழில் 1000 வார்த்தைகள் .அனைத்தும் என்னை வந்து தீண்டி போயின .
விதவை என்று ஒருவரும் திட்ட வில்லை இந்த 21 ஆம் நூற்றாண்டில் .
பிறந்த இடத்தில் மீண்டும் குடி புகுந்தேன் .
தேவதை என்று என்னை கொஞ்சிய உலகம் இன்று , வசை பாட தயாராக இருந்தது . ஜாதகம் , தோஷம் எல்லாம் என்னை தேடி வந்து அடைக்கலம் கொடுத்தன .
இரவுகள் தனிமையாயின .
சில சுகங்கள் எப்போதும் கிடைக்க வேண்டும் .இல்லையெனில் எப்போதும் கிடைக்க கூடாது .
கொடுத்து பழகியப்பின் என்னையே எரிக்க துவங்குகிறது இந்த பாவி உடல் . இளமையின் தனிமையை விட விதவையின் தனிமை கொடுமை .
நான் நானாக இருக்கும் சில சமயங்களில் , பக்கத்து வீட்டு "அம்மு " குட்டியுடன் விளையாடுவேன் .
குழந்தையாகவே இருந்திருக்கலாம் , இறந்தும் இருக்கலாம் .
அம்மு குட்டியின் அப்பாவை நான் பார்க்கவே விரும்பவதில்லை . எது வேண்டும் என்பதை அவனின் பார்வை உணர்த்திவிடும் .
முன்பு ஆண்கள் என்னை பார்த்த பார்வைகளை பாராட்டுகள் என்று எண்ணிய மனது , இப்போது பார்வையின் விஷம் அறிந்து அடங்குகிறது .
அன்றும் மற்ற நாட்களை போலத்தான் வந்தது . என் தனிமையை அழிக்கும் அந்த குட்டி சாமியை பார்க்க போனேன் சற்றே பயத்துடன் .
அவன் வீடு என்ற தைரியம் , யாரும் இல்லை என்ற துணிச்சல் ,அடைய வேண்டும் என்ற வேட்கை எல்லாம் சேர்த்து தெரிந்தது அவன் என்னை இருக்க கட்டி பிடித்ததில் .
என்ன துள்ளுற ? இதை பாரு ,
தனியா எவ்வளவு நாள் இருப்ப ? கொஞ்சம் அமைதியாய் இரு டி . ஏய் , ஏய் ..
நெருப்பில் இடப்பட்ட புழுவாய் அவனிடம் இருந்து விலகினேன் .உடம்பின் நடுக்கம் இன்னும் குறையவில்லை . கற்பு என்பது என்ன ? கணவன் இருந்தால்தானா ?
விதவைக்கும் உண்டு கற்பு .
படி தாண்டாள் பத்தினி என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல் தான், பதி இழந்தாலும் பத்தினி பத்தினி தான் .
விபச்சாரியிடம் கூட காசு கொடுத்தால் தானே சுகம் , என்னிடம் மட்டும் என் இந்த துணிச்சல் ?
விபச்சாரியை விட நான் என்ன கேவலமானவளா ?
தொட்டால் மாறுவேன் என்று தானே ..
தொட்டால் மடிவேனே அன்றி மாறமாட்டேன் .
பத்து மாதம் பெற்ற தாயிடம் கதறி அழுதேன் .
அவளோ , மானம் , மரியாதை , கவுரவம் என்றாள் .
அவன் வீட்டுக்கு போனது என் தவறாம் .
பெண்ணுக்கு பெண்ணே எதிரி .
கடவுளிடம் கூட, முறை இட பிடிக்கவில்லை .
தனிமையில் இருந்த என் காதில் விழுந்தது என் அப்பாவின் சொற்கள் .
"எல்லாம் சாமி குத்தம் தான் . அதான் , 10 பவுனுல ஒரு தாலி செஞ்சு அம்மனுக்கு போட போறேன் . அப்புறம் ஒரு பட்டு புடவை எடுத்து புற்று அம்மனுக்கு போடணும் .. "
கல்லுக்கு கூட தாலி , புடவை .. தேடி கொண்டு இருக்கிறேன் "விதவையாய்" உள்ள ஒரு தெய்வத்தை எனக்கு துணையாக .